என் மலர்
நீங்கள் தேடியது "slug 97811"
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் ஏற்கனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய்யின் நடனத்திற்கு தான் தீவிர ரசிகன் என்று பிரபல மலையாள நடிகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ கே கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய்யின் ரசிகன் நான். இதற்குக் காரணம் அவரது நடனம் தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஆச்சர்யப்படுவேன்.

துல்கர் சல்மான், விஜய்
குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடியிருப்பார். அது எளிதான விசயமல்ல. என்னைப் பொருத்தவரை நடிகர் விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தான் தெரிகிறார். எப்போதுமே அவரது நடனத்திற்கு நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது 40 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.
தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சஞ்சீவ், விஜய்
அதன்படி, பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இயக்குனர் சிவா
அடுத்ததாக சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ள இயக்குனர் சிவா, அதன்பின் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் நடித்த பத்ரி படத்தில் தான் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியதாகவும், அப்போதிலிருந்தே, தனக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருவதாகவும் இயக்குனர் சிவா கூறியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் ஜார்ஜியா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு படமாக்கி வந்தபோது கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதால் திட்டமிட்டபடி அனைத்து காட்சிகளையும் படமாக்காமலேயே படக்குழு இந்தியா திரும்பியது.

அதையடுத்து சென்னை, டில்லி என்று படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதத்தை கடந்து விட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பீஸ்ட் படக்குழு ஜார்ஜியா செல்லவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சண்டை காட்சி உள்ளிட்ட சில முக்கியத்துவமான காட்சிகளை படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய், நெல்சன்
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டியில் பீஸ்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் பீஸ்ட் படம் இருக்காது. இது வேற மாரி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.
அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.
நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார்.

அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
விஜய் ரசிகர்கள் பலரும் தளபதி 63 படத்தின் அப்டேட் குறித்து படத் தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்க, படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய் பிறந்நாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தளபதி 63 படம் பற்றி பேசுவதற்கு இது சரியான நேரமில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேசமணி, பிரே ஃபார் நேசமணி (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருக்கும் நிலையில், அந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு நேசமணிக்காக பிரார்த்திப்பதாக கூறி, அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
This is not the right time to ask for #Thalapathy63 update. #Pray_For_Neasamani 🙏🙏
— Archana Kalpathi (@archanakalpathi) May 30, 2019
விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி இந்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சவுந்தரராஜா, விஜய் ஒத்திகை பார்க்க மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் படத்தில் நடித்தது குறித்து சவுந்தரராஜா பேட்டி ஒன்றில் கூறியதாவது:
‘தளபதி 63 படத்தில் எனக்கு வெறும் 6 காட்சிகள் தான். படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று அட்லி தெரிவித்துள்ளார். அதனால் நான் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது. ஆனால் என் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் ஏற்கனவே தெறி படத்தில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்துள்ளேன். அவருடன் சேர்ந்து நடிப்பதன் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் தனது காட்சிகளை அவ்வளவாக ஒத்திகை பார்க்க மாட்டார்.

அன்றைய காட்சிகள் குறித்து அட்லி துணை நடிகர்களிடம் விளக்குவார். விஜய் வந்த உடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிப்பார். விஜய் பெரும்பாலும் ஒரே டேக்கில் நடித்துவிடுவார். அவரின் அந்த திறமையை பார்த்து வியக்கிறேன். அவர் நடிப்பை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்.
காபி என்னும் திரைப்படத்தில் நான் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறேன். சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்துள்ளேன். இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜய் மே தினத்தனத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் மதிய உணவு வழங்கியுள்ளார்.
ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, நடிகர் விஜய் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம்.
இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலியை மையமாக கொண்ட படம் என்பதால் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கின்றனர். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
’உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்புக்கு 50 ரூபாய் கொடுத்து வேடிக்கை பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் பாலைவனமாகத் தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு எனக்கு நிறைவேறியிருக்கிறது.

இந்தப் புது பயணம் தொடரும். என் படத்துக்குக் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதைத் தவறவிட்டோமே என்று குற்ற உணர்வு வருகிறது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.
அஜித் விஜய் இருவரையும் இயக்கியுள்ளீர்கள் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி. இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது, ஆனால், அரசியலுக்கு வருவதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
இந்தியாவில் திரைத்துறை பிரபலங்கள் தான் அதிகம் பிரபலமாக உள்ளனர். அவர்கள் செய்யும் விஷயங்கள் உடனே தேசிய அளவில் டிரெண்டாகி விடுகின்றன.
டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி அதிக நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் 2019 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும் ஆமீர்கான், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். அக்ஷய் குமார், ஷாருக்கான் முறையே 4-வது, 5-வது இடங்களில் இருக்கின்றனர்.

நடிகைகளில் தீபிகா படுகோனே முதல் இடத்திலும் காத்ரீனா கைப், மாதுரி தீட்ஷித் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யா ராய்க்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின் பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளார்.
தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் முதல் இடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார்.
இந்த பட்டியலில் நடிகர் அஜித் பெயர் இடம் பெறவில்லை. கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடத்திலும் சச்சின் தெண்டுல்கர் 2-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் தோனி பெயர் இடம் பெறவில்லை.