search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99007"

    • மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 ஆண்டுகளாக அம்ருதா பட்னாவிஸ் பற்றி கீழ்த்தரமான முறையில் அவதூறு கருத்துக்கள் பகிர்ந்துள்ளார்

    மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ்.இவரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் அவர் குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளாலும் கருத்துக்கள் பகிரப்பட்டது.

    இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ம்ருமிதி பன்சால் என்ற பெண் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். அப்போது ஸ்ம்ருமிதி பன்சால் 53 போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக அம்ருதா பட்னாவிஸ் பற்றி கீழ்த்தரமான முறையில் அவதூறு கருத்துக்கள் பகிர்ந்து வந்தததும், 13 போலி இ-மெயில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக அந்த பெண் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. கே.டி.ஜலீல். முன்னாள் மந்திரியான கே.டி.ஜலீல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலம் பற்றி பேஸ்புக்கில் ஒரு கருத்து பதிவிட்டார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோர்ட்டில் மனு செய்தனர். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லியிலும் கே.டி.ஜலீல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய கோரி டெல்லி கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு. கே.டி.ஜலீல் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    வாட்ஸ்அப் செயலியின் புதிய பீட்டா வெர்ஷன்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வெளியாகி இருக்கின்றன.


    வாட்ஸ்அப் புதிய பீட்டா வெர்ஷனில் பேஸ்புக்கின் புதிய பெயர்- மெட்டா தோன்றுகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பீட்டா வெர்ஷன்களில் வாட்ஸ்அப் பிரம் மெட்டா என காட்சியளிக்கிறது. இதுவரை வாட்ஸ்அப் பிரம் பேஸ்புக் என்றே தோன்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் இந்த மாற்றம் அமலாக மேலும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனம் தனது புதிய பெயரை அறிவித்தது. இத்துடன் சமூக வலைதள நிறுவனமாக மட்டும் இல்லாமல், மெய்நிகர் ஆன்லைன் உலகமாக மெட்டாவெர்ஸ் நோக்கி கவனம் செலுத்த போவதாக தெரிவித்தது.

     மெட்டா

    புது மாற்றம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.21.22.21 வெர்ஷனில் காட்சியளிக்கிறது. இது வாட்ஸ்அப் ஸ்பிலாஷ் ஸ்கிரீன் மற்றும் செட்டிங் மெனுவில் காட்சியளிக்கிறது. பீட்டா வெர்ஷனிலும் இந்த மாற்றம் அனைத்து பயனர்களுக்கும் தோன்றவில்லை.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ORaja
    தேனி:

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தற்போது மதுரை மாவட்ட ஆவின் தலைவராக உள்ளார். இவர் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பகிரப்பட்டு வருவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

    தற்போது ஓ.ராஜாவும், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த துரை என்பவருடன் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாகவும், அதற்கு ஓ.ராஜா தான் காரணம் என அறிந்துகொண்டு அதை தட்டிக்கேட்ட துரையிடம் போனில் பேசும் ஓ.ராஜா, “ஏன்டா ரேசன் கடைகளுக்கு சென்று பிரச்சனை செய்கிறாய்?” என கேட்கிறார். “நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என்கிறார் துரை.

    “நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் ஆகும். அதற்கு நீயா செலவு செய்வாய்? பணம் சேர்க்காமலும் பதவி இல்லாமலும் காரில் போக முடியுமா? ஓட்டுக்கு ரூ.500 வரை பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும். அது போன்ற எங்களுக்கு யார் என்ன செய்கிறார்கள்? என்று தெரியாதா? தேவையில்லாமல் ரேசன் கடைகளில் பிரச்சனை செய்து உன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே என்று மிரட்டுகிறார். இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. #ADMK #ORaja
    பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் தனது மனைவி இடையூறு எதுவும் இன்றி தூங்குவதற்கு ஒளிரும் மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார். #MarkZuckerberg
    நியூயார்க்:

    இறந்த மனைவிக்காக முகலாய பேரரசர் ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினார். ஆனால் பேஸ்புக் சமூக வலைதளத்தின் அதிபர் மார்க் ‌ஷகர் பெர்க் உயிருடன் இருக்கும் தனது மனைவிக்காக மரப் பெட்டி ஒன்று தயாரித்துள்ளார்.

    மார்க் ஷூகர் பெர்க்கின் மனைவி பிரிஸ்சில்லா. இரவு நேரத்தில் இவர் இடையூறு எதுவும் இன்றி தூங்க வசதியாக ஒளிரும் தன்மை வாய்ந்த மரப்பெட்டி தயரிக்கிறார். தூங்கும் போது அந்த பெட்டிக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாது.

    மனைவி தூங்குவதற்கு வசதியாக ஷூகர்பெர்க் தயாரித்துள்ள மரப்பெட்டி

    காலை 6 மணிக்கும், 7 மணிக்கும் அந்த பெட்டி மங்கலா ஒளியை உமிழ்கிறது. காலையில் அவர் கண் விழித்து எழ வசதியாக 6 மணி மற்றும் 7 மணிக்கு பெட்டியில் இருந்து மங்கலான ஒளி கிளம்புகிறது. ஏனெனில் அப்போதுதான் ஷுகர்பெர்க்கின் மகள்கள் தூங்கி எழுந்து கண் விழிப்பார்கள்.

    இந்த பெட்டி தங்களது நண்பர்கள் மத்தியிலும் பிரபலமாகி விட்டது என ஷூகர்பெர்க் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பயன்படுத்தும், வகையில் பிரபலப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். #MarkZuckerberg
    குளச்சல் அருகே பேஸ்புக் நண்பர் திருமணத்திற்கு வந்த இடத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே இணையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் வினோபின் ராஜ் (வயது 30).

    இவர், ஓமனில் கப்பல் செய்யும் இடத்தில் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது திருமணம் நேற்று இணையம் புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. திருமண விழாவிற்கு அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வினோபின் ராஜின் பேஸ்புக் நண்பர்கள் திருப்பூர் ஆத்துகிணத்துப்பட்டி சங்கீதா (24), சேலம் ராமலிங்கம் காலணி சங்கராலயம் ரோட்டையைச் சேர்ந்த மோகன் (33) மற்றும் பலரும் வந்திருந்தனர்.

    திருமண விழாவிற்கு வந்திருந்த பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகம் ஆகிக் கொண்டனர். வினோபின் ராஜின் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர்.

    கடற்கரையில் நின்று கொண்டு சங்கீதா, மோகன் உள்பட நண்பர்கள் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீதாவின் மூக்கு கண்ணாடி கடலில் விழுந்தது. இதை மோகனும், சங்கீதாவும் தேடினார்கள்.அப்போது வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடல் அலையில் சிக்கிய சங்கீதாவை மீட்டனர். மோகனை அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    மீட்கப்பட்ட சங்கீதாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கீதா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சங்கீதா பலியானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

    பலியான சங்கீதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    கடல் அலை இழுத்துச் சென்ற மோகனை தேடும் பணி இன்றும் நடந்தது. மோகன் இழுத்துச் சென்ற பகுதியில் இருந்து ஒரு நாட்டிங்கல் தொலைவில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்த மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மீனவர்கள் உதவியுடன் மோகனின் உடலும் மீட்கப்பட்டது. கரைக்கு கொண்டு வரப்பட்ட மோகனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான மோகன் காய்கறி வியாபாரி ஆவார். அவருக்கு பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடலில் மூழ்கி பலியான சங்கீதா, மோகனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
    நாகர்கோவில் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து தனது நண்பருக்கும் விருந்தாக்கிய காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

    அந்த மாணவி பேஸ்புக்கில் தனது தோழிகளுடன் தொடர்பில் உள்ளதால் அதன் மூலம் அவருக்கு பலரும் பழக்கமானார்கள். அவரும் அனைவரிடமும் பேஸ்புக்கில் தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

    அப்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த ஏசுநேசன் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கை ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான அந்த வாலிபர் முதலில் நாகர்கோவில் மாணவியிடம் நட்பு முறையில் கருத்துக்களை பரிமாறி வந்தார். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவியை தான் காதலிப்பதாக கூறினார்.

    முதலில் அவரது காதலை ஏற்க தயங்கிய மாணவி அந்த வாலிபரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.

    அதன்பிறகு அவர்கள் இருவரும் தங்களது புகைப்படங்களை பரிமாற்றிக் கொண்டனர். செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களாக அவர்களது காதல் தொடர்ந்து வந்தது.

    இந்த நிலையில் அந்த வாலிபர், மாணவியிடம் அவரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். அந்த மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் ஏசுநேசன் தனது காரில் வெள்ளமடம் பகுதிக்கு வந்தார். பிறகு செல்போன் மூலம் அந்த மாணவிக்கு தகவல் கொடுத்து வெள்ள மடத்திற்கு வரவழைத்தார். மாணவி அங்கு வந்ததும் அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி புறப்பட்டார்.

    அந்த காரில் ஏசுநேசனுடன் வாலிபர் ஒருவரும் இருந்ததால் சந்தேகம் அடைந்த மாணவி அந்த வாலிபர் பற்றி ஏசுநேசனிடம் கேட்டார். அதற்கு அவர் தனது நண்பர் ஆதிஸ் என்றும் தனக்கு துணையாக வந்துள்ளதாகவும் கூறி மாணவியை சமாதானப்படுத்தினார்.

    பிறகு அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு ஆவரைகுளத்திற்கு ஏசு நேசன் சென்றார். அங்கு வைத்து அந்த மாணவியை ஏசுநேசன் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தார். மேலும் தனது நண்பர் ஆதிசுக்கும் அந்த மாணவியை விருந்தாக்கினார். தனது காரில் அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு மீண்டும் அவரது ஊரில் கொண்டு சென்று விட்டுவிட்டு ஏசுநேசன் சென்றுவிட்டார்.

    பாதிக்கப்பட்ட அந்த மாணவி நடந்த விவரங்களை தனது வீட்டாரிடம் கூறி அழுதார். பிறகு தனக்கு நடந்த கொடுமை பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ஏசுநேசன், ஆதீஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓட்டு போடுவதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #VotingProcessRecord #PostedFacebook
    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஒரு வாக்குச்சாவடியில் ஒருவர், தான் ஓட்டு போடுவதை வீடியோ எடுத்தார். அப்போது, தேசியவாத காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார். இந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். சற்று நேரத்தில் அது ‘வைரல்’ ஆனது. அந்த நபர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

    தேர்தல் அதிகாரி கவனத்துக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும், அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இச்செயல், தேர்தல் விதிமீறல் என்பதால், அவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பேஸ்புக்கில் வீடியோ நீக்கப்பட்டது. 
    உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. #Facebook #WhatsApp #Instagram
    புதுடெல்லி:

    பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம். அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு நேற்றும் நடந்து விட்டது.

    விடுமுறை தினமான நேற்று காலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கி விட்டன. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

    இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கம் படிப்படியாக சீரடைந்தது. அதன்பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஒருமுறை இதுபோல ஏற்பட்ட செயலிழப்பு சீரடைய 24 மணி நேரம் வரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.   #Facebook #WhatsApp #Instagram 
    மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். #Facebook #PMNarendraModi #PopularWorldLeader
    நியூயார்க்:

    மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி குவித்த தலைவர்கள் பட்டியலிடப்பட்டனர்.

    அதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்து, மிக பிரபலமான உலக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பேஸ்புக்கில், அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 4 கோடியே 35 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் என்ற பேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கோடியே 37 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, 2-ம் இடம்தான் கிடைத்துள்ளது. அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 2 கோடியே 30 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.

    ஜோர்டான் ராணி ரனியா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோர் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர். கானா அதிபர் நானா அகுபோ, எகிப்து அதிபர், ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், மெக்சிகோ அதிபர், அர்ஜெண்டினா அதிபர் பிரான்ஸ் அதிபர், ருமேனியா அதிபர் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.   #Facebook #PMNarendraModi #PopularWorldLeader 
    காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை முத்தனாங் கோட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). பட்டதாரி. இவர் பேஸ்புக் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் நீண்ட நாட்களாக பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. இருவரும் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கார்த்திக் மற்றும் முத்தம்மாள் திருமணம் செய்து கொண்டனர்.

    சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.

    மேலும் கார்த்திக் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

    இது குறித்து விசாரிக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×