என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு பேருந்து"
- காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல உள்ளனர். இதன் எதிரொலியால், கடற்கரை உள்பட பல்வேறு இடங்களிலும் இன்று கூட்டம் அதிகளவில் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து சுற்றுலா தளங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லுாருக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- பெருமாநல்லுாருக்கு பயணி ஒருவருக்கு 14 ரூபாய் கட்டணமும் சிறப்பு பஸ்களில் வசூலிக்கப்படும்.
திருப்பூர்:
பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நாளை 4-ந்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் நாளை காலை வரை திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லுாருக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை நடக்கிறது.இதையொட்டி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அவிநாசி, புளியம்பட்டி, பவானிசாகர், ராஜன் நகர் வழியாக பண்ணாரிக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பண்ணாரிக்கு பயணி ஒருவருக்கு 68 ரூபாய் கட்டணமும், பெருமாநல்லுாருக்கு பயணி ஒருவருக்கு 14 ரூபாய் கட்டணமும் சிறப்பு பஸ்களில் வசூலிக்கப்படும்.நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள் பணியில் உள்ள இயக்க குழுவினரிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமான பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்பவை. சிறப்பு பஸ் புறப்படுமிடத்தில் இருந்து கிளம்பி சேருமிடம் சென்று தான் நிற்கும். இடையே 'ஸ்டேஜ்' கிடையாது.இதனால் இத்தகைய பஸ்களில் சிறப்பு சலுகைகளுக்கு அனுமதியில்லை. சிறப்பு பஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்படும் பஸ்களில் மகளிருக்கும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரம் வழக்கமான டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றனர்.
- 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
- கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும்.
திருப்பூர்
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து 90 சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாளை முகூர்த்த தினம், 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை என்பதால், வெளியூர் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 20 பஸ்கள்,கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, நாகர்கோவில், திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு 50 பஸ்கள், திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாள் முழுதும் பஸ் இயக்கப்படும். வெளியூர் சென்றவர் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை இரவு சிறப்பு பஸ் இயங்கும்.
அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமிடாமல், முன்கூட்டியே பஸ் நிலையத்திற்கு வந்து, பஸ்களின் தங்களுக்கான இருக்கையை உறுதி செய்து கொள்வது நல்லது.
சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
வருகிற திங்கள்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் சேர்த்து விடுமுறை நாளாக உள்ளது. அதுபோல விஜயதசமி தினமும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும்.
தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது. மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.
- தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.
திருப்பூர்,அக்.21-
தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, சிவகாசி, சிவகங்கை, மதுரை, தேனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு 40 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்கள் என மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.
கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றனர்.
- நேற்று நள்ளிரவு வரை 3,946 பேருந்துகளில் 2,17,030 பேர் பயணம்.
- இதுவரை சொந்த ஊர் பயணம் செய்ய 1,96,310 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. பெங்கலுக்கு முந்தைய இரண்டு தினங்களான இன்றும் நாளையும் சனி மற்றும் ஞாயிறு என்பதால் நேற்றே (வெள்ளிகிழமை) பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர் புறப்பட்டனர்.
முன்னதாகவே முன்பதிவு செய்த பயணிகள் சிரமமின்றி அவர்களுடைய ஊருக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும் இடத்திற்கு சென்று புறப்பட்டனர். சிறப்பு பேருந்துகளில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்து புறப்பட்டனர்.
முன்பதிவு செய்த மக்களுடன், முன்பதிவு செய்யாத மக்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் கூடினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் விடப்பட்டன.

சென்னையில் இருந்து அதிக அளவில் பேருந்து புறப்பட்டுச் சென்றதால் சென்னை- திருச்சி ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் ஊர்ந்த வண்ணம் சென்றன.
நேற்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் 1260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,946 பேருந்துகள் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தெிவித்துள்ளது.
இன்றும் அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்ல ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்து இயக்கம்.
- திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் இணையதளம், ஆப் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு.
திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் 6ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரும் 6ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபால், வரும் 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc official ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு.
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) வருவதையொட்டி ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் இப்போதே அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசு விரைவு பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இருந்த போதிலும் பஸ்களில் முன்பதிவு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதம் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்றும் குறைந்தப லட்சம் 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
- நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல இருக்கின்றனர்.
இதனால், பொது மக்களின் வசதிக்காக காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 8.73 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2025-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த 10.01.2025 முதல் 13.01.2025 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு, 8.73 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக, 15.01.2025 முதல் 19.01.2025 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், 17.01.2025 அன்று 28,022 பயணிகளும். 18.01.2025 அன்று 29,056 பயணிகளும் மற்றும் 19.01.2025 அன்று 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும்.
- முக்கிய நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக 19-ம் தேதி பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும்.
வரும் 20-ம் தேதி கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பஸ்கள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இன்று பிற்பகல் முதல் 20-ம் தேதி வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரெயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதவரம் புறநகர் பஸ்நிலையம், செங்குன்றம், எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையம் ஆகிய முக்கிய பஸ் நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பஸ் இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.