என் மலர்
நீங்கள் தேடியது "SmartTV"
- 4 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை விற்பனை செய்துள்ளது சியோமி நிறுவனம்
- இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்டிவி விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாகவும் சியோமி இருந்துள்ளது.
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்டிவி தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவின் அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இதனை அந்நிறுவனம் கொண்டாடி வரும் நிலையில், தற்போது ஸ்மார்ட்டிவி விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி அந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை விற்பனை செய்துள்ளது. சியோமி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதன் முதல் ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்தியது. அதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தொடர்ந்து பல்வேறு மாடல்களை அந்நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக இந்தியாவில் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிக்களை 4 ஆண்டுகளில் விற்பனை செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்டிவி விற்பனையில் நம்பர் 1 நிறுவனமாகவும் சியோமி இருந்துள்ளது. பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்டிவிக்களை கொடுத்ததே அந்நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.