என் மலர்
நீங்கள் தேடியது "Smirti Mandhana"
- முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது.
- தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணியின் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக இறங்கினர். ஷபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். தீப்தி ஷர்மா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது. தீப்தி ஷர்மா 37 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 117 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 265 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தீப்தி ஷர்மா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூன் லுலுஸ் அதிகமாக 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
- ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.
தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
- முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 314 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.
வதோதரா:
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 91 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் 1,602 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
- ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் தீப்தி சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிருக்கான ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 41, 73, 135 ரன்கள் எடுத்ததால் ஒருநாள் தரவரிசையில் மந்தனா 2-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
கேப்டன் கவுர் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டி20 தரவரிசையில் 12வது இடத்தில் நீடிக்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடம் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.
பந்துவீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.