search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling ganja jailed"

    • கஞ்சா விற்பனை செய்த பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
    • இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது மொசல் மடுவு அருகே பள்ளத்தின் வழியாக ஒரு வாலிபர் சாக்கு பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சந்தே கம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் அவர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டி சாமியின் மகன் பிரகாஷ் (வயது 27) என தெரிய வந்தது.

    மேலும் பிரகாசின் தந்தை ஆண்டிசாமி சம்பவத்தன்று மொசல்மடுவு பகுதியில் தனது வீட்டின் பன்புறம் உள்ள புறம்போக்கு நில த்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்ததையும் போலீ சார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே ஆண்டிசாமியை கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறையில் உள்ள ஆண்டி சாமியை ஜாமீனில் எடுப்ப தற்கு பணம் இல்லாததால் ஆண்டிசாமி மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.

    அதன்படி அவரது தந்தை மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து கொண்டு விற்பனை செய்ய சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    ×