என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Socail Media"

    • மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர்.
    • கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு பெண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டிலியா சேலட் என்ற இளம்பெண் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக அவரது ஐபோன் பாறைகளுக்கிடையே விழுந்தது.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர். அவர்களது இந்த முயற்சியில் பொதுமக்களும் உதவினர்.

    இதற்கிடையே அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் கடுமையாக போராடி 7 மணிநேரத்திற்கு பிறகு ஐபோனை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    இதற்கு ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்பம் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 22 வினாடிகளே ஓடும் வீடியோவில், 4 ஆண்கள் ஒன்று கூடி வேலை நிமித்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
    • திடீரென மேல் இருந்து கண்ணாடி கதவுகள் உடைந்து விழுந்த உடனே காரும் விழுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோக்களில் சிலவற்றை பார்க்கும் போது நகைச்சுவையாகவும், அதிர்ச்சியூட்டு வகையிலும் இருக்கும்.

    ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவை பார்க்கும் போது நமக்கு எங்கு தான் பாதுகாப்பு உள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.

    22 வினாடிகளே ஓடும் வீடியோவில், 4 ஆண்கள் ஒன்று கூடி வேலை நிமித்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது திடீரென மேல் இருந்து கண்ணாடி கதவுகள் உடைந்து விழுந்த உடனே காரும் விழுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

    யூ ஆர் நாட் சேஃப் எனிவேர் என்ற தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுக்கப்பட்டதாகவும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.



    • நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை தற்போது சிலர் சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர்.
    • மணமகளின் இந்த செயல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    திருமணத்தை பொதுவாக ஆயிரங்காலத்து பயிர் என்பர். அதுவும் பெண்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தான் பிறந்து வளர்ந்த ஒரு இடத்தை விட்டு மற்றொரு வீட்டுக்கு பெண்கள் செல்கின்றனர்.

    இதனால் தனது குடும்பத்தை விட்டு பிரியும் சோகத்தை எண்ணி திருமணத்தின்போது மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுவர். நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை தற்போது சிலர் சமூகவலைதளங்களில் வெளியிடுகின்றனர்.

    அந்தவகையில் திருமணத்தின்போது தனது குடும்பத்தினரை கட்டியணைத்து மணப்பெண் ஒருவர் அழுகிறார். ஆனால் கேமராவை திருப்பிய பின்னர் அந்த பெண் உடனே சிரித்த முகத்துடன் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மணமகளின் இந்த செயல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.




    • ‘ஆன்-லைன்’ மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.
    • பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.

    நாடு முழுவதும் நேற்று முன்தினம் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குருகிராமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை வினோதமான முறையில் பழிவாங்கிய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. அந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்.

    அதன்படி 'ஆன்-லைன்' மூலம் 100 பீட்சாக்கள் ஆர்டர் செய்து அதற்கான முகவரியில் தனது காதலன் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார். அதோடு 100 பீட்சாவுக்கான பணத்தை 'கேஷ்-ஆன் டெலிவரி' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஆர்டர் செய்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவு வினியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களுடன் அந்த இளம்பெண் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்றனர். அங்கிருந்த பெண்ணின் காதலன், நான் எந்த உணவும் ஆர்டர் செய்யவில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.

    இதுதொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், காதலர் தினத்தன்று இப்படி ஒரு பரிசை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் எனவும், மற்றொரு பயனர், காதலித்ததால் அவருக்கு கிடைத்த பரிசு இது எனவும் பதிவிட்டனர்.

    ×