search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social networking site"

    • உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.
    • அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.

    சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.

    திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது. 

    • விலைகள் உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது.
    • இந்த பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உணவுகளை ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்பவர்கள் உணவுகளின் விலையை கண்டுகொள்வதில்லை.

    ஆனால் ஓட்டல்களில் உணவு வகைகளுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் செயலிகள் மூலம் அந்த உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது அவற்றின் விலை சுமார் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

    இதுதொடர்பாக அபிஷேக் கோத்தாரி என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், சொமோட்டோ மூலம் உப்புமா ஆர்டர் செய்த போது அதன் விலை ரூ.120 என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று மெனுவில் உள்ள உப்புமா விலையை பார்த்த போது ரூ.40 ஆக இருந்தது.

    இதேபோல ஓட்டலில் தட்டு இட்லி விலை ரூ.60 என இருந்தது. ஆனால் ஆன்லைன் செயலியில் தட்டு இட்லி விலை ரூ.160 என காட்டியது. இதைப்பற்றிய பில்லுடன் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அவரது பதிவு வைரலானது.

    இதையடுத்து சொமோட்டோ நிறுவனம், அபிஷேக்கிற்கு அளித்த பதிலில், `எங்கள் செயலியில் உள்ள விலைகள் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். அதே நேரம் பயனர்கள் பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அவரது பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.

    திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.

    பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

    • உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
    • விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்.

    நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் விரைவாக செல்ல வசதியாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில ரெயில்களில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த ஒரு தம்பதிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக விதித் வர்ஷ்னி என்ற பயணி தனது எக்ஸ் தள பக்கத்தில் செய்துள்ள பதிவில், `கடந்த 18-ந் தேதி எனது மாமாவும், அத்தையும் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது.

    தயவு செய்து விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என ரெயில்வே அதிகாரிகளை டேக் செய்திருந்தார்.

    அவரது இந்த பதிவு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட சேவை அளித்தவருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டது என கூறி உள்ளனர்.

    • மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப அணியின் களப்பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தயா. இளந்திரையன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வளவனூர் ப. அன்பரசு, துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், கிருஷ்ணராஜ், பாலாஜி, சசி ரேகா பிரபு, தொகுதி நிர்வாகிகள் தேவா, குரு ராமலிங்கம், மகாலட்சுமி செந்தில், ரகுபதி, கதிரவன், நாராய ணமூர்த்தி, குமரவேல், மூகாம்பிகை நாராயணன், புளிச்சப்பள்ளம் ராதிகா சித்தானந்தன், கோட்டக்குப்பம் ஜாகிர், திருக்கோயிலூர் தொகுதி விக்னேஷ், ஆசைத்தம்பி பரிமளம், திருநாவுக்கரசு, மேகநாதன், நவீன் குமார், விக்னேஷ், அகமது ஷெரிப், சுப ஸ்ரீ, செல்வகுமார், தேவன், மோகன், ராஜேஷ், சசிகலா கபிரியேல், அபுபக்கர், கோமதி பாஸ்கர், சந்திரசேகர், செல்வகுமார், அருண், வள்ளி ராஜேஷ், முத்தமிழ், இராமு, சுப்புலட்சுமி மணிகண்டன், அரவிந்தன், கபிலன், புஷ்பராஜ், மனோஜ் குமார், மணிகண்டன், பூவராகவன், சரவணன், யுவராஜ், சரவணகுமார், பழனிவேல், ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • நடவடிக்கை எடுக்க ெபாதுமக்கள் வலியுறுத்தல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் டவுன் பஸ்சில் டிைரவர் செல்போன் பேசியப்படி பஸ் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அரசின் விதிமுறைகளை மீறி டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பேருந்து ஓட்டி செல்லுகிறார். மேலும் அவருக்கு பிடித்த நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு கொண்டு அஜாக்ரதையாக பஸ்சை ஓட்டி வருகிறார்.

    இப்படி பயணிகள் ஏற்றிக்கொண்டு பஸ் இயக்குவதால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட டிரைவர் மீது அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பிற பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.
    • புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை எல்.டி பேங்க் தெருவை சேர்ந்தவர் சபீர், இவரது சகோதரர் ஷாகீர் (17).இவர் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30-ந் தேதி ஷாகீர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அண்ணன் சபீர் இந்தியன் (டாய்லெட்) கழிவறை வடிவத்தில் 5 கிலோ கேக் ஆர்டர் செய்து அதை அவரது தம்பி பிறந்தநாள் அன்று அவருக்கு ஆச்சரியமூட்டும் வகையில் கேக்கை வெட்டி சாப்பிட வைத்து நூதன முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார்.

    இந்தியன் டாய்லெட் முறையில் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சற்று அருவருப்பாக இருந்தாலும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் புதிய சிந்தனையில் உருவாக்கும் நோக்கில் இதுபோன்று செய்ததாக தெரிகிறது. இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பண்ருட்டி அருகே காதலியின் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேல்பாதி, மாரியம்மன் கோவில் தெருசேர்ந்தவர் சிவனேசன். இவரது மகள்சிம்னி துஷிதா (22) இவர் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் முத்தமிழன் என்பவரை காதலித்து வந்தார். இவரது நடத்தை சரியில்லாமல் தற்போது பிரிந்து விட்டார். இந்தநிலையில் முத்த மிழன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதி வேற்றம்செய்துள்ளார் இது பற்றி பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்துமுத்தமிழனைகைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் அருகே கீரப்பாளையம் சேர்ந்த மாணவி நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று தனது ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு கல்லூரி மாணவி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வாலிபர் மாணவியின் புகைப்படத்தை எடுத்துள்ளார். மேலும் வாலிபர் மாணவி தன்னை காதலிப்பதாக தெரிவித்து புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மருத்துவ கல்லூரி மாணவி இது சம்பந்தமாக கேட்டபோது மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கல்லூரி மாணவி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் காதலன் மீது வழக்கு.
    • மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் தனியார் கல்லூரியில் பண்ருட்டியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் அமர்ந்திருந்தார். அப்போது மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார். அப்போது காதலன் நம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவேன்‌. மேலும் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி மாணவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விஷால், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×