search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Software service"

    • மக்கள் பிரச்சினையை தெரிந்து கொள்ள மென்பொருள் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும்.

    மதுரை

    மதுரை மகபூப்பாளையம் சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசலில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாப்பாளையம் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஜுவாகிருல்லா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை 3-வது தளத்தில் உள்ள பொதுமக்களின் குறை தீர்க்கும் மையத்தில் புதிய தொலைபேசி எண் மற்றும் மென்பொருள் சேவை அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சேவைைய தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சியின் பொது மக்களுக்கான சேவையில், இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும். பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது கடினமான பணி. இதற்கு ஒரு கட்டமைப்பு அமைய வேண்டியது முக்கியம். மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் பொதுமக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் நிறைவேறாத பிரச்சினைகள்பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள இயலும்.

    பொது மக்களும் கோரிக்கை மீதான நடவடிக்கை, தற்போதைய நிலை ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    மதுரை மாநகராட்சி மென்பொருள் சேவை மூலம் கவுன்சிலர்கள் நிறைவேறாத பிரச்சினைகள்குறித்து அதிகாரிகளிடம் வலியுறு த்த முடியும். மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிய கமிஷனருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் புகாருக்கான தனி அடையாள எண் பெறுவது முக்கியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அடுத்தபடியாக கவுன்சிலர்கள் வாரம் ஒரு முறை மென்பொருள் சேவை மூலம் பொது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா? என்பதை தெரிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×