என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Soil smuggling"
- அதிகாரியை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அருகே 12 புத்தூர் கிராமத்தில் உள்ள ஓமந்தாங்கல் ஏரியில் மொரம்பு மண் கடத்துவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர் .
அதபேரில் ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மண் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவரை கண்டவுடன் டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்து தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதே போல ஆரணி அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் ஏரியில் 2 டிராக்டர்களில் மண் கடத்துவதாக வந்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர் .
இந்த 2 சம்பவங்களில் தப்பி ஓடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்தார்.
- பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மறவா நத்தம் ஏரியில் கடந்த சனிக்கிழமை சட்ட விரோதமாக மண் கடத்தி வந்த லாரியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக மடக்கிப்பிடித்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோரிடம் மண் கடத்தி வந்த லாரியையும் சம்பந்தப்பட்டவர்களையும் ஒப்படைத்தார். இது குறித்து மறவா நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ், சதீஷ்குமார், வரதராஜ் ஆகிய 3 பேரையும் சின்னசேலம் போலீசார் அதிரடியாக கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். மீதமுள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி உரிமையாளர் மற்றும் பா.ம.க.பிரமுகர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமர் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அைடத்தனர்.
- டிரைவர் கைது
- போலீசார் விசாரணை
நெமிலி:
பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி மற்றும் வேடந்தாங்கல் பகுதிகளில் நேற்று சப்கலெக்டர் பாத்திமா ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது மகேந்திரவாடியில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் டிப்பர் லாரி ஒன்று எதிரே வந்தது.
அந்த டிப்பர் லாரியின் டிரைவர் சப் கலெக்டர் வருவதை பார்த்து லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்னர் லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் முறையாக அனுமதியின்றி கிராவல் மண்ணை கடத்திவந்தது தெரியவந்தது.
உடனே சப் கலெக்டர் பாத்திமா நெமிலி தாசில்தார் பாலசந்தரை அழைத்து பறிமுதல் செய்யப்பட்ட லாரியை பாணாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் தயாளன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதி யில் மண் கடத்தப்படுவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர் கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி வந்த வர்கள், அதிகாரிகளை கண்ட தும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து தாசில்தார் சண் முகசுந்தரம் டிராக்டரை பறி முதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருவாய்த் துறையினர் சோதனையில் சிக்கியது
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தின் ஏரியில் லாரி மற்றும் டிராக்டர் மூலம் மொரம்பு மண் கடத்துவதாக சப்-கலெக்டர் தனலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் சப் கலெக்டர் மற்றும் வருவாய்த் துறையினர் முள்ளிண்டிரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்ற போது லாரியில் மொரம்பு மண் அள்ளியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையொடுத்து சப் கலெக்டர் தனலட்சுமி மொரம்பு மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து பணியில் சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் நேற்று திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சென்ற 2 டிப்பர் லாரி மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அரசு அனுமதி இன்றியும் மற்றும் உரிய உரிமம் இல்லாமல் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்்.
- அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காரியமங்கலம் பெரிய ஏரியில் தொடர்ந்து ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக அப்பகுதி விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
செங்கம் -திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலை பணி தேவைக்காக கரியமங்கலம் பெரிய ஏரியிலிருந்து மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு ஏரி மண் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன் தொடர்ச்சியாக சுமார் 5-க்கும் மேற்பட்ட லாரிகள் பகல் நேரத்திலேயே ஏரி மண்ணை சுரண்டி எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தரப்பில் கூறப்படுகிறது.
கரியமங்கலம் ஏரி தண்ணீரை நம்பி கரியமங்கலம் சுற்றுவட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. ஏற்கனவே கரியமங்கலம் ஏரிக்கு செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஏரியிலிருந்து வர வேண்டிய உபரி நீர் கால்வாய் பிரச்சனை காரணமாக தண்ணீர் வரத்து சரிவர வராத சூழல் உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளது.
மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா வதாகவும் தெரிவித்துள்ளனர்.
உரிய அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்லும் நபர்கள் குறித்து செங்கத்தில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
இச்செயலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாமக்கல்-பரமத்தி சாலையில் வள்ளி புரத்துக் கும், காவேட்டிப் பட்டிக்கும் இடையே சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப் படுவதாகவும், அதில் உள்ள மண் அனுமதியின்றி வெட்டி எடுக்கப் படுவதாகவும், தனிநபர் சிலருக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் இப்பணி நடைபெறுவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் நாமக்கல்-பரமத்தி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் டி.எஸ்.பி ராஜேந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது புகார் குறித்து முறையாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகளுக்கு அனுமதி பெற்று வண்டல் மண் மற்றும் ஓடை மண் எடுத்து வருகின்றனர். சமீப காலமாக விவசாய பணிக்கு அந்த மண்ணை பயன்படுத்தாமல் செங்கல் சூளைக்கு சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மட்டுமின்றி ஓடைகளில் இருந்து மண் அள்ளிச் செல்லும் லாரி மற்றும் டிராக்டர்கள் கிராமங்களில் மின்னல் வேகத்தில் சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மண் அள்ளிச் சென்ற லாரி மின்னல் வேகத்தில் சென்று பள்ளி வாகனம் மீது மோதியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது போன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதால் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதை தடுக்கவும், அசுரவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்