என் மலர்
நீங்கள் தேடியது "Soil"
- கொள்ளிட பாலத்தில் மண்குவியல் அகற்றப்பட்டது
- மாலைமலர் செய்தி எதிரொலியால் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதில் 1.3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்க 24 தூண்கள் உள்ளன. இதில் இரண்டு தூண்களுக்கும் நடுவில் இணைக்கும் வகையில் ரப்பர் பொருத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய பாலமான இந்த பாலத்தில் பல வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாலத்தின் இருபுறங்களிலும் மணல் குவியல்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இதனை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மாலை மலர் நாளிதழில் வெளியானது.
இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைவதுடன், மாலைமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
- திருமண மண்டபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
- மண்வளம் காப்போம் பற்றி உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.
உடுமலை:
ஈஷா யோகா மையத்தின் சார்பில் உடுமலைபேட்டை சுற்றுவட்டாரப்பகுதியான மடத்துக்குளம், ஜல்லிபட்டி, எரிசனம்பட்டி, குமரலிங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மண்வளம் காப்போம் பேரணி நடைபெற்றது.
பின்னர் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மண்வளம் காப்போம் பற்றி உறுதிமொழி ஏற்றுகொண்டனர். முன்னதாக வாகன பேரணி செல்ல இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் நகராட்சி திருமண மண்டபத்தின் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், சிறப்பு விருந்தினர்களான யூ. கே .பி .முத்துக்குமாரசாமி, உடுமலை மக்கள் பேரவை வர்ஷிணி இளங்கோ, லட்சுமி ஜுவல்லரி சிபி சக்கரவர்த்தி யோகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
- நீர் நிலைகளில் வண்டல் மண் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
- மனுதாரர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறை வேற்றிக்கொள்ள வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள வண்டல் மண், கிராவல் மண்ணை விவசாயம், பொது மண்பாண்ட தொழில் பணிக ளுக்காக பொதுமக்கள் எடுத்துச் செல்ல இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இதன்படி பயனாளிகள் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாய பணிக்காக வண் டல் களிமண் கிராவல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவ சாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும், அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை) குறித்தும் விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலு வலரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மண்பாண்டம் தொழில் செய்பவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம் 1983-ன் கீழ் தமிழ்நாடு மண்பாண்டம் தொழிலாளர் கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினராக இருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 75 க.மீட்டரும், எக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டரும் எக்டேர் ஒன்றுக்கு 22 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண், கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கப்படும்.
வண்டல் மண், கிராவல் மண் நீர்வளத்துறை பொறியா ர் ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் மூலம் வாகனத்தில் ஏற்றி விடப்படும். தூர்வாருதல் மற்றும் வாகனத்தில் வண்டல் மண், கிராவல் மண்ணை ஏற்றுவதற்கான கட்டணமாக முதன்மை தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளவாறு அல்லது மாற்றம் ஏதும் செய்யப்பட்ட தொகையை செயற்பொறியாளரின் பெயரில் காசோ லையாக மனுதாரரால் அர சுக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும் .
வண்டல் மண், கிராவல் மண் எடுத்துச்செல்ல கலெக்டரின் உத்தரவு ஆணை பெற்றவுடன் அதன் படி மனுதாரர் சம்பந்தப் பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறை வேற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே கண்மாயிலிருந்து வண்டல்மண் கிராவல் 2 மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மானாமதுரை வட்டாரத்தில் மணல் திருட்டு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் வைகை ஆற்றிலும் கண்மாய் பகுதிகளிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். இரவு 10 மணி முதல் விடிய விடிய மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அனுமதியின்றி சவடு மண் ஏற்றிக்கொண்டு செல்வதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சவடு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவர் வெள்ளைச்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் மண் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை அபராதத்துடன் விடுவிக்காமல் பறிமுதல் செய்து அரசின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதே போல மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்பது பெயரளவிலேயே உள்ளது. எனவே மண் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.