search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sold Lottery Tickets"

    • கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜாஜிபுரம் சுப்பையா தெரு அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்த போலீசார் அங்கு சென்ற போது கருங்கல்பாளையம் கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த பூபதி (46) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு நம்பரை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் இருந்து 9 கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கார் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்றபோது ஆர்.என்.புதூர் அமராவதி நகரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு பெறும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 2 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் .

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பெருந்துறை ரோடு, சஞ்சய் நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த அசோக் (48) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடமிருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.10 ஆயிரத்து 890 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்னிமலை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அதேப்பகுதியை சேர்ந்த முஸ்தபா (58) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளை தாளில் எழுதி நிச்சயம் பரிசு விழும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அவர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

     பவானி:

    பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் பவானி-அந்தியூர் மெயின் ரோடு நல்லிபாளையம் பிரிவு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து பவானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது அங்கு இருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது பவானி மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் தாண்டான் (46) என்பதும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் தாண்டானை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கேரள வெள்ள நிவாரணத்திற்காக லாட்டரி சீட்டை விற்பனை செய்த அக்காள், தம்பி அந்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். #KeralaRain #KeralaFloods
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருச்சூர் கொடக்கரையை சேர்ந்த ஜெயா-சுனில் தம்பதியின் மகள் விஷ்ணுபிரியா, மகன் விஷ்ணுதாஸ் ஆகியோர் வெள்ள நிவாரண நிதி வழங்க லாட்டரி விற்பனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நிவாரணம் வழங்க லாட்டரி விற்பனை செய்கிறோம். லாட்டரி வாங்குங்கள் என்று கூவி கூவி விற்பனை செய்தனர். காலை முதல் மாலை வரை விற்பனை செய்த பணத்தில் 2 மூட்டை அரிசி, காய்கறிகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    அக்காள்-தம்பியின் இந்த செயல் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #KeralaRain #KeralaFloods



    ×