search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Somali pirates"

    • கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான 'எம்.வி.ருயென்' என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, 15-ந் தேதி 'எம்.வி.ருயென்' சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதில் இருந்த கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர். அவர்கள் கேட்காமல் சரக்கு கப்பலில் இருந்து இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானப்படையினரும் தாக்குதலில் கடற்படையினருக்கு உதவி செய்தனர். சுமாா் 40 மணி நேர சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 சிப்பந்திகளும் மீட்கப்பட்டனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ். கொல்கத்தா போர் கப்பல், 35 கடற்கொள்ளையர்களுடன் மார்ச் 23-ந் தேதி (நேற்று) மும்பை வந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டாக்கா:

    சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

    கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

    இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.


    அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    ×