search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sorkavasal"

    • சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது
    • ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார்.

    ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.

    கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி அவரே இயக்கி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சொர்கவாசல் பாலாஜிக்கு கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சி–யார் கோவில் 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திரு–மங்கை–யாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ் வார் அவதரித்த திருத்தல–மாகவும் விளங்கு–கிறது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி–யது. அன்று முதல் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ் தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதையொட்டி மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் நோக்கி வந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசலை கடந்து உற்சவ நாச்சியார் வழிநடை உபயங்கள் கண்ட–ருளி, ஆழ்வார்-ஆச்சாரி–யார் மரியாதையாகி திரு–வாய்மொழி ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அப்போது சொர்க்க–வாசல் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் உற்சவ நாச்சியாரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9.45 மணி அளவில் வீணை வாத்தி–யத்துடன் மூலஸ்தா–னம் சென்ற–டைந்தார். இதனை தொடர்ந்து 19-ந்தேதி வரை திருவாய் மொழி திருநாட்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். வருகிற 20-ந்தேதி தீர்த்தவாரி, திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். 21-ந் தேதி–யன்று இயற்பா சாற்று மறையுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணி வரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினி–யோகம் நடக்கிறது.


    • திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது
    • அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார்

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா தொட்டியம் அருகே உள்ள அரசலூர் ஊராட்சி திருநாராயணபுரத்தில் அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள், அரையர்களால் பாடப்பட்ட இத்தளத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து, இரா பத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் பகல் பத்து நிகழ்ச்சி நடைபெற்று முக்கிய நாளான சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 5.04 மணியளவில் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. பக்தர்கள் ரெங்கா, ரெங்கா, கோவிந்தா, என பக்திப் பெருக்கோடு கோஷம் எழுப்பினர். அப்போது அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் பல்லக்கில் சொர்க்கவாசலை கடந்து வந்து ஆல்வார்களுக்கு எதிர்சேவை அளித்தார். அப்போது பாசுரங்கள் பாடபட்டது. பின்னர் பெருமாள் தம்பதிர் சமேதமாக ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பத்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்சி மலைக்கோட்டை உதவி ஆணையர் ஹரிஹர சுப்ரமணியன், கோவில் செயல் அலுவலர் பிரபாகர், அறநிலையதுறை ஆய்வாளர் பிருந்தா, தொட்டியம் ஆய்வாளர் ஆனந்தி, தா.பேட்டை ஆய்வாளர் விஜய் பூபதி, முசிறி செயல் அலுவலர் வித்யா, அரசலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி, திருநாராயணபுரம் கோயில் கணக்கர் மனோகர் மற்றும் கோவில் அலுவலக உதவியாளர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கும் போது ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொட்டியம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    ×