என் மலர்
நீங்கள் தேடியது "Soudi Arabia"
- பாலன் சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
- பாலாஜி அன்ட் கோ உரிமையாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் மத்திய அமைச்சரகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பாலன்(வயது 60). இவர் சவுதி அரேபியாவில் உள்ள நிறுவனத்தில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அவர் அங்கு இறந்துவிட்டார். அவரை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உரிய வசதி இல்லாத நிலையில், அவரது மனைவி லட்சுமி தங்கம் மற்றும் அவர்களது உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட பொருளாளரும், பாலாஜி அன்ட் கோ உரிமையாளருமான செட்டிகுளம் பாலகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பாலாஜி ஆகியோர் மத்திய அமைச்சரகத்தை தொடர்பு கொண்டு பேசினர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான வள்ளியூர் ஹவுசிங் போர்டில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த மத்திய, மாநில அரசுக்கும் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், நரேந்திர பாலாஜி ஆகியோருக்கும் பாலன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.