search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sound and Light Show"

    • தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் ஒலி- ஒளி காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் தியாகிகள் நாட்டுக்கு செய்த தியாகங்கள் குறித்து இளைய தலைமுறையினர் எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒலி- ஒளி காட்சி யை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு அமைக்கப்பட்ட ஒளிரும் வண்ண விளக்குகளை இயக்கி வைத்து, பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    விழாவில் தமிழக சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. ஜேன் கிறிஷ்டிபாய், மாவட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி நவீன் பாண்டி யன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி, சங்கர நாரா யணன் பேரூராட்சி கவுன்சி லர் மணி கண்டன், நகர செயலாளர் பாரதி கணே சன், துணைச் செய லாளர் மாரியப்பன், விளாத்தி குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழி காவ லர்கள், தமிழ் அறி ஞர்கள் ஆகியோரின் மணி மண்ட பங்களில் ஒளி- ஒலி காட்சி அமைக்க தமிழ்நாடு முதல் -அமைச்சர் உத்தர விட்டுள்ளார். அதன்படி பரிட்சாத்த முறையில் 6 மணிமண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டி லேயே முதன் முறை யாக எட்டயபுரம் மகா கவி பாரதியார் மணி மண்டபத்தில் ஒலி- ஒளி காட்சி தொடங்கி வைக்க ப்பட்டுள்ளது. இன்னும் 5 இடங்களில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இது படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மணிமண்டபங்களில் அமைக்கப்படும். இதன் மூலம் அந்த தியாகிகள் நாட்டுக்கு செய்த தியாகங்கள் இளைய தலைமுறையும் எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம். இதனை செய்தித்துறையின் மைல்கல்லாக நாங்கள் கருதுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×