என் மலர்
நீங்கள் தேடியது "Souvenirs"
- தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
- கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மென்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், சேதுராமன், விஜயகுமார், ராஜ்குமார் தமிழ்நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி முன்னிலை வைத்தனர். ஆசிரியர் இன்பாலன் வரவேற்றார்.
மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் உமா மகேஸ்வரன் மாணவர்களுக்கு தன்னை அறிதல், இலக்கினை நிர்ணயித்தல், பொறுப்புணர்வுகளை நினைத்து செயல்படுதல், நினைவாற்றல் தேர்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள், படிப்பதற்கான வழிமுறைகள், படித்தவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், தேர்வினை எழுதும் போது செய்ய வேண்டியவை போன்றவை குறித்து பயிற்சி அளித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.