என் மலர்
நீங்கள் தேடியது "space station"
- விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
- மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பீஜிங் :
சீனா விண்வெளியில் தனெக்கென புதிதாக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. 'தியான்ஹே' என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்காக சீன விண்வெளி வீரர்கள் சூழற்சி முறையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக சீனா ஏற்கனவே வெண்டியன் என்கிற ஆய்வுகூட அமைப்பை அனுப்பியது. அந்த ஆய்வுகூட அமைப்பு 'தியான்ஹே' விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெங்டியன் என்கிற 2-வது ஆய்வுகூட அமைப்பை சீனா நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனான் கடற்கரையில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து 'லாங் மார்ச் 5பி ஒய்4' ராக்கெட் மூலம் மெங்டியன் ஆய்வுகூட அமைப்பு விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த ஆய்வுகூட அமைப்பு நுண் புவியீர்ப்பு விசையை படிக்கவும், திரவ இயற்பியல், பொருள் அறிவியல், அடிப்படை இயற்பியல் ஆகியவற்றில் சோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை கட்டி முடிக்க சீனா தீவிரம்
- ஷென்சோ-15 விண்கலம் மூலம் வீரர்கள் பயணம்
பெய்ஜிங்:
விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது.
இதையடுத்து ரஷியாவிற்கு போட்டியாக புவி சுற்றுப் பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த ஜூன் மாதம் ஷென்சோ-14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ-15 விண்கலத்துடன் இணைந்த ஒய்15 கேரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது.

இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவும் பணி சில நிமிடங்களில் வெற்றிகரமாக நடந்ததாக கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ-15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் ஆறு விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கியிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
- தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
- சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
கேப்கனவெரல்:
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்சின் தனியார் ராக்கெட் புறப்பட்டு சென்றது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது.
சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ரய்யானா பர்னாவி, விமானப்படை பைலட் அலி அல்கர்னி மற்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்திவிட்சன், தொழில் அதிபர் ஜான்ஷோப்னர் என 4 பேர் விண்வெளிக்கு சென்றனர்.
அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ்பால்கென்-9 விண்கலத்தில் பயணம் செய்தனர். இதில் தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
ஆக்சியம் ஸ்பேஸ் ஏஎக்ஸ்-2 திட்டத்தில் அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, சவுதி விமானப் படையின் விமானி அலி அல்-கர்னி அனுப்பப்பட்டுள்ளார்.
ரய்யானா பர்னாவி, விண்வெளிக்கு சென்ற முதல் சவுதி அரேபிய பெண் என்ற பெருமையை பெற்றார். சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் சவுதி அரேபியாவை சேர்ந்த வீரர், வீராங்கனையை தனியார் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.
- பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டது.
- ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்த இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலராகும்.
வாஷிங்டன்:
பல்வேறு நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். ஆரஞ்சு வண்ணத்தில் மலர்ந்துள்ள இந்த ஜின்னியாதான் பூமிக்கு அப்பால் மலர்ந்த முதல் மலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015-ல் நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரெனால் தொடங்கப்பட்டது.
மைக்ரோகிராவிட்டி எனப்படும் நுண்ஈர்ப்பு விசையில் தாவரங்களும் மலர்களும் எப்படி வளர்கின்றன என்பதை விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள வாய்ப்பாக நாசா விஞ்ஞானிகள் இந்த மலர்ச்செடியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்த்துள்ளனர். இந்த மலரை மலரச் செய்ததன் மூலம் விண்வெளியில் அதிக தாவரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் வளர்ந்துள்ள ஜின்னியா பூவின் படத்தை நாசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வது போன்ற எதிர்கால நீண்ட தூர பயணங்கள், மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும். எனவே விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த ஜின்னியா சர்வதேச விண்வெளி நிலையத்தில் காய்கறி வசதியின் ஒரு பகுதியாக சுற்றுப்பாதையில் வளர்க்கப்பட்டது. விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது பூமியிலிருந்து பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்டகால பயணங்களில் புதிய உணவின் மதிப்புமிக்க ஆதாரத்தை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
- 90 நிமிடங்கள் விண்வெளி நிலையம் உடனான தொடர்பு துண்டிப்பு
- ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தினர். மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட மின்தடை குறித்து ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது. முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.
ஒருவேளை இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது. ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.
இதுகுறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில் ''விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கோ எந்தவொரு ஆபத்தும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது. இதற்காக விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
- ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும்.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான்-3 பயணத்தின் வெற்றிக்கு பிறகு அனைத்து சாத்திய கூறுகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். என்ன வகையான அறிவியல் மேம்பாடுகளை செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். விண்வெளி நிலையத்தை உருவாக்குவது போன்ற பெரிய திட்டங்களும் உள்ளது. விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
எதிர்காலத்தில் ஒரு விண்வெளி நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதனை ரோபோ இயக்கத்துடன் தொடங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும். அது நடந்த உடன் அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்குள் விண்வெளி நிலைய கட்டிட பணிகளை நாம் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றனர்.
- ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறுகளால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது
வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அவர்கள் 8 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது.
ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் விண்வெளியில் சிக்கி உள்ளனர்.
இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என அமெரிக்க விண்வெளி கழகமான நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளியில் இருந்து இந்திய நேரப்படி நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டது.
இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை 9.30 மணிக்கு நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கியது.
பூமியை நெருங்கியபோது விண்கலத்தில் இருந்து பாராசூட் விரிவடைந்தது. அதன்பின் விண்கலம் மெதுவாக தரையில் இறங்கியது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் விண்கலம் திரும்பி உள்ளது. விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.
- சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விண்வெளி நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் உலகில் தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்த பெருமை சீனாவுக்கு கிடைக்கும்.
சமீபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் அடங்கிய விண்வெளி வீரர்கள்குழு தியாங்காங் விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் 6 மாதம் அங்கு தங்கி இருந்து முக்கிய பாகங்களை பொருத்திவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் பத்திரமா கபூமிக்கு திரும்பினார்கள்.
விண்வெளி நிலையத்தில் இத்தனை காலங்கள் வீரர்கள் தங்கி இருந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது மேலும் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினரை சீனா அனுப்ப முடிவு செய்தது.
இந்த குழுவில் காய்ஜூஷே, சென்டாங், லியூயாங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் இன்று காலை விண்வெளிக்கு சென்றுள்ளனர். சென்ஷோ -14 என்ற விண்கலம் மூலம் இவர்கள் விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கான்சு மாகாணத்தில் உள்ள ஜியூகுவான் ஏவுதளத்தில் இருந்து இன்று, மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டது. அவர்களை சுமந்து சென்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது.
இந்த விண்கலம் தியாங்காங் விண்வெளி நிலையத்தை அடைந்ததும் இந்த விண்கலம் அத்துடன் இணைக்கப்படும். அதில் இந்த குழுவினர் இறங்கி விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
சீனாவில் உள்ள சி.எம்.எஸ் ஏ ஆய்வு மையக்குழுவினர் வழிகாட்டுதலுடன் 6 மாதங்களில் விண்வெளி நிலைய பணிகளை அவர்கள் நிறைவு செய்வார்கள் என சீனா ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் லீன் ஜிகி யாங் தெரிவித்து உள்ளார்.
இன்னும் சில ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வுபெற உள்ளது. அதன் பிறகு சீனாவின் இந்த விண்வெளி நிலையம் தான் உலகில் செயல்படக் கூடிய ஒரே விண்வெளி மையமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.