search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spark"

    • இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தம்.
    • பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

    சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது.

    விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    • மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், மார்க்கெட் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, பூ கடைகள் உள்ளன. இந்த பஜார் பகுதிக்கு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மேலும் பஜார் பகுதியை சுற்றி அரசு பள்ளி, தனியார் பள்ளி, திருமண மண்டபங்கள், கோவில்கள் உள்ளன.

    இதனால் இந்த சாலையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் இன்று காலை ஆஞ்சநேயர் கோவில் அருகே மார்க்கெட் கூட்டுச்சாலையில் திடீரென உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது.

    மேலும் மின்கம்பிகள் உரசி தீப்பொறிகள் பறந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×