என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Speaker Appvu"
- ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்காக கடந்த 1996-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்த 366 குடியிருப்புகள் பழுதடைந்து விட்டது.
அடிக்கல் நாட்டு விழா
இந்த காரணத்தினால் அவை சமீபத்தில் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக மீண்டும் 408 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பு அழைப்பா ளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
ரூ.53.19 கோடி நிதி
இந்த குடியிருப்புக்கு ரூ.53.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. ஒரு குடியிருப்புக்கு மொத்த மதிப்பு தொகை ரூ.13.04 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மானியமாக ரூ.1.50 லட்சம், மாநில அரசின் மானியமாக ரூ.7 லட்சமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வசித்த 365 பயனாளிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் பயனாளி பங்களிப்பு தொகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடியிருக்கும் 400 சதுர அடி பரப்பளவில் கழிவறை, படுக்கையறை, சமையலறை ஆகிய வசதி யுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வெளி யேறும் கழிவுநீர் மாநக ராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வசதியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., பாளை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, கவுன்சிலர்கள் பவுல்ராஜ், இந்திராணி, நிர்வாக பொறியாளர் சாந்தி, உதவி நிர்வாக பொறியாளர் மாடசாமி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொரு ளாளர் சித்திக், ஒன்றிய செய லாளர்கள் ஜோசப் பெல்சி, ராஜன், மாவட்ட கவுன்சி லர் கனகராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவுவிடம், சென்னையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் தகுதியை மீறி பேசி உள்ளதாக கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, சட்டமன்றத்தில் விதிப்படி யும், சட்டப்படியும் மட்டுமே அவை நடவடிக்கைகள் நடந்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாகவோ, பேரவை விதிகளுக்கு புறம்பாகவோ எந்த நடவடிக்கையும் சட்டமன்றத்தில் நடை பெறவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டமன்றத்திற்கு வராத காரணத்தினால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.
- ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஆவரைகுளம்,செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப் பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களும் மற்றும் குடியிருப்பு புஞ்சை நிலங்களும் உள்ளன.
- பல லட்ச ரூபாய் செலவில் சீரமைத்து, சமப்படுத்தி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள்.
வள்ளியூர்:
ராதாபுரம் தாலுகாவில் திருவாவடுதுறை ஆதீன இடங்களை ஏற்கனவே வசித்தவர்களுக்கு உரிமம் வழங்கி குத்தகை வசூலிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.
கலெக்டருக்கு மனு
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஆவரைகுளம், கடம்பன்குளம், பழவூர், மதகனேரி, சவுந்தர லிங்கபுரம், ஊரல்வாய் மொழி, ஊரல்வாய்மொழி காலனி, சண்முகபுரம், அடங்கார் குளம், மேலக்கிளாக்குளம், கீழக்கிளாக்குளம், செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப் பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களும் மற்றும் குடியிருப்பு புஞ்சை நிலங்களும் உள்ளன.
இந்த நிலங்களில் பல நூறு ஆண்டுகளாக அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திருவாவடுதுறை ஆதீன நிலத்தில் குடியிருப்போர் குத்தகை உரிமம் பெற்று தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்ச ரூபாய் செலவு செய்து வீடுகள் அமைத்து மின் இணைப்புகள் பெற்றும், ஆண்டாண்டு காலமாக குடியிருந்தும் வருகிறார்கள்.
இதுபோல் விவசாயிகள் ஆதீனத்திலிருந்து குத்தகை உரிமம் பெற்று நிலத்தை தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்ச ரூபாய் செலவில் சீரமைத்து, சமப்படுத்தி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு குத்தகை பெற்று அனுபவித்து வருபவர்கள் காலம் சென்று விட்டால் அவர்களது வாரிசுதாரர் யாரேனும் ஒருவர் குடியிருப்புகளில் குடியிருந்து வருவார், நிலங்களில் விவசாயம் செய்து வருவார்.
இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று தவறாக எடுத்துக் கொண்டு சிலர் அப்புறப்படுத்தியும், அப்புறப்படுத்த முயற்சித்தும், அவர்கள் குத்தகை செலுத்த முயன் றாலும் அவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கா மலும், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரி களின் கவனத்திற்கு தெரியபடுத்தாமலும், தன்னிச்சையாக செயல்பட்டு பிற நபர்களுக்கு குடியிருப்பு நிலங்களையும், விவசாய நிலங்களையும் மேற்படி நபர்கள் கூட்டாக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ரூ. ஆயிரத்துக்கு மட்டும் ரசீது கொடுத்து விட்டு குடியிருப்போர்களையும், விவசாயிகளையும் அப்புறப்படுத்தி வருவதாக என்னிடம் பலபேர் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவ்வாறு அனுபவத்தில் இருப்பவர்களை அப்புறப்படுத்தியிருந்தால் மீண்டும் அதே குடியிருப்புகளிலும், அதே விவசாய நிலத்திலும் மீண்டும் அனுமதிக்க வேண்டுவதோடு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் மேற்படி நபர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் அவர்களது வாரிசுதாரர்களுக்கும், அனுபவத்தில் இருந்தவர் களுக்கும் திருவாவடுதுறை ஆதீனமும், மாவட்ட வருவாய்த்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து வெளிப் படை யாக அறிவித்து குத்தகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
விதிகளுக்கு உட்பட்டு
மேலும் எனது தலைமை யிலும், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முன்னிலையிலும் கடந்த 24.12.2022 அன்று ராதாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நடந்த சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடிவுபடி தற்போது நிலம் அல்லது வீடு யார் அனுபவத்தில் உள்ளதோ அவர்களுக்கு மேற்படி நிலங்களை முறையான விசாரணையின் படி அரசு விதிகளுக்கு உட்பட்டு குத்தகை வழங்க வேண்டும்.
நிலங்களின் நிலை எவ்வாறு உள்ளதோ அதே நிலை தொடர வேண்டுமென முடிவு செய்யப் பட்டதை செயல் படுத்த வேண்டுகிறேன்.மேற்படி விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி மேற்படி கிராமங்களில் வாழ்கின்ற குடியிருப்போர்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர் களது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, இந்த அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கின்ற நன்மதிப்புக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்