என் மலர்
நீங்கள் தேடியது "special anointing"
- தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
- பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய்பாபா கோவிலில் உள்ள சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணைய், பூக்கள், தேங்காய் ஆகியவற்றை நேர்த்தி கடனாக வந்து செலுத்தினர். மேலும் பக்தர்களே நேரடியாக சாய்பாபாவிற்கு பசும்பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு நேற்று சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்தி வேலூர்:
ஆனி மாத சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வல்லப விநா யகருக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், மகாமாரியம்மன் கோவில் உள்ள விநா யகர், பொத்தனூர், பாண்ட மங்கலம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், வடகரையா த்தூர், ஜேடர்பாளையம், மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.