search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special meeting"

    • கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார்.
    • ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்கள் அமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நியமன குழு, வேளாண்மை உற்பத்தியாளர் குழு, கல்வி குழு, பொதுநோக்க குழு அமைக்கப்பட்டு அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110 -இன் கீழ் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், ஆணையாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டி, உதவியாளர் சிலம்பரசன், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்வாரிய ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது
    • புகார்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்

    கரூர்:

    கரூரில் மின்வாரிய ஊழியர்ளுக்கான சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் மின் பகிர்மான வட்டத்தில் கரூர் நகரிய கோட்டத்தில் செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் தலைமையில், மின்வாரிய ஊழியர்களுக்கான சிறப்புக்கூட்டம் தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வாட்ஸ்அப், டிவிட்டர் செயலி, மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து மின்துறை சார்ந்த அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். மின் வாரியத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து விரிவாக்கப் பணிகளை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் பார்வைககு எடுத்து சென்று வாரியத்தின் நற்பெயரை காக்கவேண்டும். விபத்தில்லாமல் பணி செய்ய கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் 214 பேர் கலந்து கொண்டனர். மேலும் கோட்ட அளவில் பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

    மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது. #TNAssembly #mekedatuDam
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது என தகவல் தெரிவிக்கின்றது. #TNAssembly #mekedatuDam
    ×