search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special prayer emphasizing social harmony"

    • தர்காவில் 140 -ம் ஆண்டு சந்தனக்குட கந்தூரி விழா
    • 4 ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து தர்கா வந்தடைந்தது

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140 -ம் ஆண்டு சந்தனக்குட கந்தூரி விழா நடைபெற்றது. முஸ்லீம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார். நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ் மைதீன் கொடியேற்றி சந்தனக்கூடு விழாவினை தொடங்கி வைத்தார்.ஷே

    க்உசேன் சந்தனக்குடத்தை தலையில் தாங்கி கொண்டு ஊர்வலமாக வந்தார். சந்தனக்குடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் ஊர்வலமாக வந்து தர்கா வந்தடைந்தது . இந்த சந்தனக்கூடு விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் திருச்செங்கோடு சேலம் நாமக்கல் ஈரோடு பகுதிகளில் இருந்து பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

    ×