search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special sacrifices"

    • தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
    • வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.

    இங்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், வீரணார், ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    ஸ்ரீசித்தர் பீடத்தில் கூடுதல் ஆன்மிக சிறப்பாக வாழ்வில் பிரச்சினைகள் யாவற்றையும் தலைமுறைக்கும் போக்கி கேட்ட வரம் அருளும் வராஹி அம்மன் சிலை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வழிபாடுகள் முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்பது ஐதீகம்.






    ×