என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special welcome"

    • தென்காசி ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • நமது மாவட்டத்தின் பெருமையினை முதல்-அமைச்சர் நெஞ்சில் நீங்காத வண்ணம் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும்.

    சிவகிரி:

    சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் சுமதி, பேரூர் அவைத்தலைவர் துரைராஜ், வார்டு கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விக்னேஷ், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மன்றம் புல்லட் கணேசன், சி.எஸ்.மணி, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், மணிகண்டன், விக்கி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிற டிசம்பர் 8-ந்தேதி தென்காசிக்கு வருகை தர உள்ளார். ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக தென்காசி ரெயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நலத்திட்ட உதவிகள் வழங்கி முடித்த பின்னர் மதுரைக்கு செல்லும் வழியில் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் மற்றும் மாவட்டத்தின் கடைசி எல்கையான சிவகிரி ஆகிய பகுதிகளில் ஏராளமான தொண்டர்களுடன் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து தி.மு.க. கட்சி பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்த நமது மாவட்டத்தின் பெருமையினை முதல்-அமைச்சர் நெஞ்சில் நீங்காத வண்ணம் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×