என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Special worship devotees"
- பெரியஅரவங்குறிச்சியில் கரையம்மன், மலையம்மன், முத்துக்கருப்பணசாமி கோவில்களின் திருவிழா நடந்தது.
- சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியஅரவங்குறிச்சியில் கரையம்மன், மலையம்மன், முத்துக்கருப்பணசாமி கோவில்களின் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 24-ம் தேதி சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அன்று வாணவேடிக்கைகளுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடந்தது. மறுநாள் கரையம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து குதிரை, நாய், காளை, மதிலை சிலைகள் பெரிய அரவங்குறிச்சியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.
தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி வகையறாக்கள், 8 ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் இந்த திருவிழா 5 வருடங்களுக்கு பிறகு நடந்தது குறிப்பிடத்தக்கது.