என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sprit"

    • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • விசாரணையில், அவர் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சின்னத்துரை என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் எரிசாராயம் கொண்டு சென்றததும் தெரியவந்தது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சடையன்கிணறு பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சின்னத்துரை (வயது 45) என்பதும், விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் எரிசாராயம் கொண்டு சென்றததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து எரிசாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×