search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spy satellite"

    • வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
    • என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சிதறியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

    பியாங்யாங்:

    தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே, கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

    வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திரவ ஆக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார். இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    • வடகொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
    • தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

    வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது.

    இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு "வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமானது. அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுவதாக உள்ளது" என விமர்சித்திருந்தார்.

    மேலும், "எந்தவித நிபந்தனை இல்லாமமல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், நேரத்தையும் பேசக்கூடிய கருத்தையும் வடகொரியாவே முடிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யொ ஜாங் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.

    செயற்கைக்கோள் மூலம் மிரட்டல், மற்ற ஆயுதங்களை செயல்படுத்துதல் போன்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், "ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. எனவே, வடகொரியா அந்த நோக்கத்திற்காக ஒருபோதும் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது." என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு முறை தோல்வியுற்ற நிலையில், 3-வது முறையாக வடகொரியா வெற்றிகரமாக செலுத்தியது.
    • ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க நாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

    பயாங்யாங், நவ.28-

    வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரி யாவின் முதல் உளவு செயற்கைகோளும் இது தான்.

    இந்த செயற்கை கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொ ரியா கூறியுள்ளது.

    இந்த உளவு செயற்கை கோளானது அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற் படை நிலையங்களின் புகை படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

     மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெ ரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றை யும் புகைப்படம் எடுத்து உள்ளது.

    இந்த புகைப்படங்களை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், "உளவு செயற்கைகோளை நன்றாக சரிபடுத்தும் நடைமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையும். டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த செயற்கைகோள் உளவுப் பணியை தொடங்கும்" என்று தெரிவித்து உள்ளது.

    ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை.

    • சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
    • ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

    ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதை வடகொரிய வழக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகள் விதித்த போதிலும், வடகொரிய அதற்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அதன் வேலையை செய்து வருகிறது.

    உச்சக்கட்டமாக உளவு பார்க்கும் செயற்கைக்கோளை தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்தது. இந்த உளவு செயற்கைக்கோள் கொரிய தீபகற்பம், ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நடவடிக்கையை துல்லியமாக கண்டறியும். இதனால் தங்களது பாதுகாப்பை அதிகரித்து கொள்ள முடியும் என வடகொரிய தெரிவித்து வந்தது.

    இந்த ஏவுகணையை செலுத்தினால், பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா நேரடியாக எச்சரித்து வந்தது.

    ஆனால், சில மாதங்களுக்கு முன் உளவு பார்க்கும் செயற்கைக்கோளை செலுத்தியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. செயற்கைக்கோளின் பாகங்களை சேகரித்த தென்கொரியா, அது உளவு பார்க்கும் திறனற்றது எனத் தெரிவித்தது.

    ஆனால், வடகொரியா தனது முயற்சியை கைவிடாமல், 2-வது முறையாக முயற்சி செய்தது. 2-வது முறையாகவும் தோல்வியடைந்தது. அப்போதும் வடகொரியா மனம் தளறவில்லை.

    தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதை சரி செய்தது. கடந்த இரண்டு நாட்களாக, நாங்கள் உளவு செயற்கைக்கோளை செலுத்த இருக்கிறோம் என ஜப்பானுக்கு தகவல் தெரிவித்தது. இதனால், தென்கொரியா தங்களது கவலையை தெரிவித்தது. ஜப்பான் எல்லையில் உள்ள கடற்பகுதியில்தான் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தும் என்பதால் தகவல் தெரிவித்தது.

    இந்த நிலையில், உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுப்பாதையில் நுழைந்ததாக என வடகொரியா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், கொரியா பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒருபகுதியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, உளவு செயற்கைக்கோள் செலுத்தியதை ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் வடகொரியா செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜப்பான் உறுதிப்படுத்தாத நிலையில், நாங்கள் அதுகுறித்து மதிப்பீடு செய்து வருகிறோம் என பென்டகன் தெரிவித்துள்ளது.

    வடகொரியாவின் செயல் ஐ.நா. தீர்மானத்தை மீறியது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பாதுகாப்பிற்கான பயங்கரமான ஆத்திரமூட்டல் செயல் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கான துணை மந்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும், 2018-ம் ஆண்டு போடப்பட்ட பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    • முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது.
    • அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை

    அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில் உளவு செயற்கை கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு உள்ளது.

    இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் கூறும்போது, வடகொரியா வரும் நாட்களில் உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என்றனர்.

    வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து வடகொரியா அதிகாரிகள் தெரிவித்ததாக ஜப்பான் கடலோர காவல் படை கூறியுள்ளது.

    அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்று கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் ஹிரோ முனே கிகுச்சி தெரிவித்தார். ஆனால் அந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் ஏவப்பட்ட உளவு செயற்கைக் கோளை போலவே இருக்கலாம் என்று நம்புகிறேன் என்றார்.

    • இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ராக்கெட் நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் விழுந்தது.
    • சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது.

    நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

    அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

    வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

    முன்னதாக வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது.

    ×