என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri chakkaram"

    • கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.
    • கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலைப் போன்றே மாங்காடு அம்மன் கோவிலும் சமயச் சிறப்பும் கலைச்சிறப்பும் பெற்றது.

    இயற்கையான சூழலில் மக்கள் குடியிருப்புகள் உள்ள பகுதியில் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

    சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் விஜய நகர காலத்தில் முழுமையான திருப்பணிப் பெற்று விரிவு படுத்தப்பட்டுள்ளது.

    இக்கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகமண்டபம், முகப்பு மண்டபம், முதல் திருச்சுற்று பிரகாரம், இரண்டாம் திருச்சுற்று கோபுர வாயில் போன்ற பல்வேறு பகுதிகளைப் பாங்குறப் பெற்றுத் திகழ்கிறது.

    கோவில் கருவறை சதுர வடிவுடையது. கருவறை சுவரை ஒட்டி அம்மன் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறை நடுவே ஸ்ரீசக்கரம் உள்ளது.

    கருவறை முன் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

    இது தூண்கள் எதுவுமின்றி சதுரவடிவில் எளிமையாக காணப்படுகிறது.

    அம்மன் கோவில் கருவறை மற்றும் அர்த்த மண்டப புறச்சுவர்களில் பஞ்ச கோஷ்டங்கள் அமைந்துள்ளன.

    இக்கோஷ்டங்களில் மூன்று மாடங்களில் இறைவடிவங்கள் அமைக்கபட வில்லை.

    பொதுவாக சக்திகளின் வடிவங்கள் அமைக்கப் படுவதுண்டு.

    இங்கு அர்த்த மண்டப கோஷ்டம் ஒன்றில் இடம்புரி விநாயகரின் சிற்பவடிவம் ஒன்று அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறது.

    இதன் மேற்கரங்கள் அங்குசத்தையும், பாசத்தையும் பற்றியுள்ளது.

    கீழ்வலக்கரம் தந்தத்தை கடக முத்திரையில் பிடித்துள்ளது.

    கீழ் இடக்கரம் மோதகத்தைப் பற்றியுள்ளது.

    மற்றொரு கோஷ்டத்தில் காளியின் வடிவம் வழிபாட்டில் உள்ளது.

    கருவறையையும் அர்த்த மண்டபத்தையும் சுற்றி வலம்வர திருச்சுற்று பாதை உள்ளது.

    திருச்சுற்று பாதையைச் சுற்றிலும் உருளை வடிவிலான கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களின் மேல் பகுதி வெட்டுப் போதிகையுடன் உள்ளது.

    இந்த திருச்சுற்றை அலங்கரிக்கும் பகுதிகள் இடைச்சோழர் காலத்தவை.

    கன்னியாகுமரியில் அம்மன் கோவில் திருச்சுற்றுத் தூண்களை ஒத்த அமைப்பில், இவை காணப்படுகின்றன.

    • சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.
    • சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இது அதிஸ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் ஆறு(6) அங்கங்களை உடையதாக அமைந்துள்ளது.

    அதிட்டானம் என்னும் அடிப்பகுதி உபானம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை என்னும் ஆறு உறுப்புகளை உடையது.

    அதிட்டானத்தைச் சுற்றிலும் விஜயநகரக் கால கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    அதிட்டானத்தின் மேல் அம்மன் கோவில் சுவர் பகுதி எழுப்பப்பட்டுள்ளது.

    சுவரைச் சுற்றிலும் அழகிய அரைத்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    கருவறைச் சுவரில் தெற்கு, மேற்கு வடக்கு ஆகிய திசைகளில் தேவகோஷ்ட மாடங்கள் அலங்கரிக்கின்றன.

    மாடங்களின் பக்கங்களில் அரைத் தூண்களும், மேற்புறம், கூரை, கிரீவம், சாலை வடிவுடைய சிகரம் ஆகிய பகுதிகளுடன் கோஷ்ட மாடங்கள் காணப்படுகின்றன.

    சுவரின் பக்கங்களில் உள்ள அகாரை என்னும் பகுதியில் ஒற்றைக் கால் பஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன.

    சுவரின் மேல் கூரை என்னும் பிரஸ்தரம் அமைந்துள்ளது.

    இது எழுதகம், கபோதகம், வியாளம் என்னும் மூன்று உறுப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது.

    கூரை மேல் விமானத்தளம் அமைந்துள்ளது.

    இத்தளங்கள் கர்ணக்கூடு, சாலை, பஞ்சரம், என்னும் உறுப்புகளுடன் மாறி மாறி அலங்கரிக்கின்றன.

    தளங்களைச் சுற்றிலும் அழகிய சிற்ப வடிவங்கள் கதை உருவங்களாகக் காணப்படுகின்றன.

    விமான கிரீவம் செவ்வக வடிவுடையது.

    கிரீவத்தின் மேல் சாலை வடிவுடைய சிகரம் அலங்கரிக்கின்றது.

    சிகரங்களின் பக்கங்களில் மகாநாசிகள் அலங்கரிக்கின்றன.

    சிகரகத்தின் மேல் 5 ஸ்தூபிகள் அமைந்து காணப்படுகின்றன.

    இவ்விதம் அம்மன் கோவில் விமானம் அதிட்டானத்திலிருந்து பிரஸ்தனம் வரை கருங்கல் திருப்பணியாக அமைந்துள்ளது.

    அதன் மேல் உள்ள தளங்களும், கிரீவம் மற்றும் சிகரப்பகுதிகள் செங்கல்லும் சுதையும் கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.

    விமானம் சுமார் 30 அடிக்கும் மேல் உயரம் உடையது. கி.பி. 15,16 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விமானம் எழுப்பப்பட்டுள்ளது.

    • பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.
    • இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இக்கோவில் மகா மண்டபத்தை எட்டுக் கல்தூண்கள் அலங்கரிக்கின்றன.

    இத்தூண்களில் மயில் வாகனம், கொடிப்பெண், குந்துச்சிம்மன், சீரும்யாளி, யானை, யானை மீது சிம்மம் சண்டை செய்யும் காட்சி, தாமரை மலர் ஏந்தி நிற்கும் சூரியன், அழகிய அன்னம் ஆகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கீழும் மேலும் நடுவிலும் சதுரமாக அமைந்து இடைப்பகுதி 16 பட்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு முக மண்டபத்தூண்களும், பதினாறு (16) பட்டைகளுடன் அலங்கரிக்கின்றன.

    இரண்டாம் திருச்சுற்று மிகப்பெரிய அளவில் அண்மைக்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இப்பிரகாரத்தின் வடதிசை வாயிலில் பெரிய கோபுரம் உயர்ந்த நிலையில் ஏழு நிலைகளை உடைய கோபுரமாக அமைந்து காட்சி அளிக்கிறது.

    பிரகாரத்தின் கீழ் திசையிலும் கோபுர வாயிலைக் காணலாம்.

    • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
    • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

    இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

    ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

    அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

    வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

    இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

    கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

    ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

    அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

    கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

    பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

    • சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
    • இச்சக்கரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

    இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்கரம் மிகவும் விசேஷமானது.

    43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்கரம், "அஷ்டகந்தம்" என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.

    இந்த அர்த்தமேரு ராஜயந்திரமாகும்.

    இதற்கு கூர்மம் (ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அமைத்து, அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து, அதன்மேல் ஸ்ரீசக்ர இயந்திரம் வரையப்பட்டுள்ளது.

    இந்த அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.

    இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். எனவே இதற்கு அபிசேகம் கிடையாது.

    சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.

    இச்சக்கரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

    அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

    • இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.
    • நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.

    கருவறையில் அம்பாளாகப் பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி

    மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.

    கருவறையில் உள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    • அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.
    • சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

    திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார்.

    அதைக் கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றித் தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார்.

    அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார்.

    அப்பகுதியைத் திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார்.

    எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

    அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.

    அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

    இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.

    • எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.
    • இவரை, “சீர் பெருமாள்” என்றும் அழைக்கிறார்கள்.

    சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்குத் திருமணச்சீர் கொண்டு வந்தார்.

    ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

    அப்போது மார்க்கண்டேயர் பெருமாளை இங்கேயே தங்கும்படி வேண்டினார்.

    எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.

    பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார்.

    இவரை, "சீர் பெருமாள்" என்றும் அழைக்கிறார்கள்.

    • பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.
    • மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    நிறைமணி தரிசனம்

    பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.

    ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.

    புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தவ மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர்.

    இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    முத்தேவியருடன் தங்கத்தேர்

    தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரசுவதி, இலக்குமி மூவரும் உலா வருகின்றனர்.

    சப்தமாதர்களில் ஒருத்தியான பிராம்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள்.

    தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர்.

    மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    இதற்கு இடதுபுறம் தவ காமாட்சி சன்னிதி உள்ளது.

    • குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.
    • பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    சித்திரைத் திருவிழா -10 நாட்கள்.

    இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.

    இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விஷேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர்.

    ஆண்களுக்கும் இது பொருந்தும்.

    குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.

    பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    உத்தியோக உயர்வுக்காவும், உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

    நேர்த்திகடன்:

    அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்) புடவை சாத்துதல், பால் அபிசேகம், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம்.

    • காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.
    • எனவே வைகுண்டப் பெருமாளை ‘சீர்பெருமாள்’ என்றும் ‘தடைநீக்கும் பெருமாள்’ என்றும் அழைக்கிறார்கள்.

    பூவுலகில் பார்வதியை மணமுடிக்க பரமன் வருவதை அறிந்த திருமால், பூவுலக முறைப்படி திருமணம் நடைபெறுவதால் தன் குடும்பம் சீராக கணையாழியை வலக்கரத்தில் எடுத்துக்கொண்டு,

    இறைவனின் திருமணத்திற்கு தடையேதும் இருப்பின் அதனை விலக்கிடவே வலக்கரத்தில் அருளாழி என்னும் சக்கரம்,

    உடன் செலுத்தக்கூடிய நிலையில் பிரயோகச் சக்கரமாக தயார் நிலையில் வைத்துக் கொண்டு, புவிமாது திருமாது (பூமிதேவி, ஸ்ரீதேவி)

    புடைசூழ மாங்காட்டை வந்தடைந்தார்.

    இறைவியின் தவத்தால் பூவுலகில் தோன்றிய சிவபெருமான் சுக்கிர முனிவரின் கடுந்தவத்தால் இறைவிக்கு காட்சி கொடுக்காமல் அம்மையிடம் காஞ்சி மாநகர் வந்து தவம் செய்வதை தொடர்வாய் என்றும்,

    காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.

    எனவே திருமாலும் காஞ்சி மாநகருக்கு புறப்பட்டார்.

    அம்மனின் தவம் காஞ்சி மாநகரிலும் தொடரும் என்றும் பின்னர்தான் திருமணம் நிகழ்வதாகவும் எனவே அதுவரையில் இங்கேயே தங்கும்படியும் மார்க்கண்டேய மகரிஷி (இருடி) திருமாலிடம் வேண்டினார்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் (சீர் பெருமாள்):

    மார்க்கண்டேய மகிரிஷியின் வேண்டுதலுக்கிணங்க திருமால் அருள்மிகு வைகுண்டப் பெருமாளாக எழுந்தருளினார்.

    இறைவன் இறைவி திருமணத்திற்கு இடையூறு நிகழா வண்ணம் பிரயோகச் சக்கரத்துடன் இருக்கும் இவர் தன் தங்கைக்கு சீர்கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழியுடன் (மோதிரம்) காட்சி தருகிறார்.

    எனவே வைகுண்டப் பெருமாளை 'சீர்பெருமாள்' என்றும் 'தடைநீக்கும் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

    • பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.
    • தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது.

    19.01.2000 அன்று மகாசம்ப்ரோஷனம் நடந்தேறியது.

    அருள்மிகு வைகுண்டநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருக்கும் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.

    பெருமாளின் கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. இது ஓர் அபூர்வ அமைப்பு.

    மேலும் மற்றொரு கையில் கணையாழி (மோதிரம்) காணப்படுகிறது.

    அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு சீதனமாக கணையாழியைக் கொண்டு வந்ததாக 'கர்ண பரம்பரை' வரலாறு கூறுகிறது.

    பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.

    அருகிலேயே ஸ்ரீமார்க்கண்டேய மாமுனியும் காட்சி தருகிறார்.

    கருடாழ்வார் அபூர்வ அமைப்புகளுடன் காட்சி தருகிறார்.

    தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    ஸ்ரீ அனுமனுக்கு தனிச் சந்நிதியும், கனகவல்லித் தயாருக்கு தனிச்சந்நிதியும், ஸ்ரீஆண்டாளுக்கு தனிச்சந்நிதியும் பிரகாரத்துக்குள் அமைந்துள்ளன.

    திருக்கோயிலின் நுழைவு வாயிலின் யாழிகள் இருபுறமும் அழகிய தோற்றத்துடன் அமைந்து காணப்படுகின்றன.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் 'வைகானச' ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இத்திருக்கோயிலில் 3 கால பூஜைகள் நித்திய பூஜைகளாக நடைபெற்று வருகின்றன.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி இவ்வாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ×