search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri kalaivani school"

    • மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமர் யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது.
    • ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ் கண்ணன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5 -வது இடத்தையும் பிடித்தனர்.

    சங்கரன்கோவில்:

    மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமர் யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது. இந்த தேர்வில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அளவில் 9-ம் வகுப்பில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 9-ம் வகுப்பில் தேர்வெழுதிய ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ் கண்ணன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5 -வது இடத்தையும் பிடித்தனர். தமிழ்நாடு அளவில் 11-ம் வகுப்பில் 251 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக வித்யா என்ற மாணவி பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், முத்துலட்சுமி என்ற மாணவி பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 22 மாணவ, மாணவிகள் பிரதமர் யாசவி உதவித்தொகைக்கு பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
    • முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்

    சங்கரன்கோவில்:

    தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்கள்.

    ஆண்கள் மூத்தோர் பிரிவில் முதலிடமும், பெண்கள் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆகிய மூன்று அணிகளும் முதலிடம், பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். முதலிடம் பெற்ற நான்கு அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது.
    • பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவு முதலிடம் பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    இதில் மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இளையோர் பிரிவில் சந்தோஷ், மூத்தோர் பிரிவில் பவேஷ், மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    பெண்கள் மூத்தோர் பிரிவில் கனிமொழி, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வட்டார அளவில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களை பள்ளி தாளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.



    ×