என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sri lanka parliament"
- அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. இதில் நள்ளிரவு (நேற்று) முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அத்துடன் நவம்பர் மாதம் 14-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அனுர குமார திசநாயகா அதிபராக பதவி ஏற்றதும் பாராளுமன்றம் கலைப்பு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தத நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக்கலாம் 2025 ஆகஸ்ட் வரை உள்ளது. இருந்த போதிலும் 11 மாதங்களுக்கு முன்னதாக நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக (வயது 56) வெற்றி பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகா நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகா நியமதித்தார். இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம் இலங்கை வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
54 வயதான ஹரினி அமரசூரியா சமூக ஆர்வலர், பல்கலைக்கழக பேராசிரியர், அரசியல் தலைவர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.
பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி.க்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.
- அனுர குமார திசநாயக நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
- பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்.
கொழும்பு:
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.
இந்த நிலையில் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
மேலும் இன்று இரவு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயக உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 55 முதல் 66 நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண் டும். இதனால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங் கேவை அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்தார்.
அதை ஏற்க ரனில் விக்கிரமசிங்கே மறுத்து விட்டார். ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்றும் அறிவித்தது.
அதையடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சே மீது எதிர்க் கட்சிகள் 2 தடவை கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இருந்தும் ராஜபக்சேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க சிறிசேனா மறுத்து வருகிறார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும்படி அதிபர் சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் அரசியல் குழப்பம் தீர பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை வலியுறுத்தி உள்ளனர்.
இக்கருத்தை ஏற்கனவே அவர் கூறி இருந்தார். தற்போது மீண்டும் அதை வலியுறுத்தி இருக்கிறார்.
இந்தநிலையில் இலங்கை பாராளுமன்றம் வருகிற 5-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சே அரசு மீது 3-வது தடவையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் தீர்மானம் வெற்றி பெற்றால் புதிய பிரதமரையும், மந்திரிகளையும் அதிபர் சிறிசேனா நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். #MahindaRajapaksa #sirisena
கொழும்பு:
இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.
இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்டார். சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை ஏற்க வில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தினார். முதலில் பாராளுமன்றம் கூடும் தேதியை சிறிசேனா அறிவித்தார்.
ஆனால் ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டதை அறிந்து பாராளுமன்றத்தை திடீரென கலைத்தார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விழித்தது. ராஜபக்சேவை பிரதமராக அறிவித்ததற்கும் தடை விதிக்கப்பட்டது.
அதையடுத்து பாராளு மன்றம் கூடியது அங்கு ராஜபக்சே மீது 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்றது. இருந்தும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.
எனவே, பிரதமர் அலுவலகம் அரசு பணத்தை செலவு செய்ய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய பிரச்சினைகளால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவுகிறது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ரனில் விக்ரமசிங்கே தொடர்ந்து நான் தான் பிரதமர் என கூறி வருகிறார். அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே பிரதமர் பணியை ஆற்றி வருகிறார். இவர்களில் யார் உண்மையான பிரதமர் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி இலங்கை பாராளு மன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க அதிபர் சிறிசேனா முடிவு செய்துள்ளார். இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். #srilankaparliament #sirisena #rajapaksa
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.
நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2 முறை தோற்கடிக்கப்பட்ட பின்னரும் ராஜபக்சே எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் என பல்வேறு கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய் தன. 16-ந்தேதி நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. நாற்காலிகளும், மிளகாய் பொடியும் வீசப்பட்டது. போலீசார் அவைக்கு உள்ளே அழைக்கப்பட்டதும் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில எம்.பி.க்களும் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறை குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் நேற்று ஒரு குழுவை அமைத்தார்.
இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அரசு நிதியில் செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 225 உறுப்பினர்களை கொண்ட அவையில் 123 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ராஜபக்சே ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர். இது ராஜபக்சேவுக்கு மற்றொரு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.இதுபோன்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகளால் கொண்டுவர முடியாது. அரசு சார்பில் மந்திரி ஒருவர் தான் கொண்டுவர முடியும் என்று சிறிசேனா கட்சி எம்.பி. திசநாயகே தெரிவித்தார்.
இதுபற்றி அரசியல் நோக் கர்கள் கூறும்போது, “பிரதமரின் செயலாளர் அரசு நிதியில் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேறியது, ராஜபக்சே பிரதமர் பதவியில் நீடிப்பதற்கு தனிப்பெரும்பான்மையான 113 எம்.பி.க்களின் ஆதரவு இல்லை என்பதற்கான மற்றொரு அறிகுறி. நவம்பர் 15-ந்தேதி முதல் பிரதமரின் செயலாளருக்கு அரசு நிதியில் இருந்து அலுவலக செலவுகளை செய்வதற்கு அதிகாரம் இல்லை. இந்த தீர்மானத்தை மீறினால் சட்டப்படி யார் வேண்டுமானாலும் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க முடியும்” என்றனர். #SriLankaParliament #MahindaRajapakse
இலங்கையில் பிரதமர் பதவி வகித்த ரனில் விக்ரம சிங்கேவை கடந்த மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். எனினும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு கிடைக்கவில்லை.
எனவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து அதிபரின் உத்தரவுக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
அதன்பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்தன. அவை இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது.
இதற்கிடையே நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வு குழு பட்டியலை வெளியிட்டார். அதில் சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
அதன்மூலம் பாராளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு கடும் தோல்வி ஏற்பட்டது.
இந்த நிலையில் 122 எம்.பி.க்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “பிரதமர் ராஜ பக்சேவும், அவரது மந்திரிகளும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவரது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. #srilankaparliament #rajapaksa
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அத்துடன், அதிபரின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்தது.
அதன்பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான எம்பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் ராஜபக்சே அரசுக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலம்மிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் நேற்று இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன.
அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் இந்த கட்சிகள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தன.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் பாராளுமன்றம் கலைத்து உத்தரவிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவின் நடவடிக்கை செல்லாது எனவும், பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்தும், ஜனவரி 5-ந் தேதி பாரளுமன்ற தேர்தல் நடத்த தடை விதித்தும் தீர்ப்பளித்தனர். #SriLankaSupremeCourt #SriLankaparliamentsacking
இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.
ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.
இதனால், நாடாளுமன்றத்தை வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து சிறிசேனா உத்தரவிட்டார். 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு 120-க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
நாடாளுமன்ற சபாநாயகரின் ஆதரவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு இருந்தது. அவர் ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், நாடாளுமன்றம் வருகிற 14-ந் தேதி கூடும் என்று சிறிசேனா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 15 எம்.பி.க்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பும் ராஜபக்சேயை ஆதரிக்க மறுத்துவிட்டது.
இதனால் நாடாளுமன்றத்தில் பலப்பரீட்சை நடைபெற்றால் ராஜபக்சே தோற்பது உறுதி ஆனது. இது அதிபர் சிறிசேனாவுக்கு பேரிடியாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த அதிபர் சிறிசேனா, நேற்று இரவு திடீரென்று நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இந்த தகவலை மூத்த மந்திரி ஒருவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சே தரப்புக்கு (ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி) 8 எம்.பி.க்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை உள்ளது. நாடாளுமன்றத்தின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதிபர் சிறிசேனா அதை அதிரடியாக கலைத்து இருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய நாடாளுமன்றம் ஜனவரி 17ம் தேதி பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கே தரப்பு கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Sirisena #Ranilwickremesinghe #SrilankaParliament #ParliamentElection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்