என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sridhar"
- முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம்.
- இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும்.
மும்பை:
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
சூர்யாவை எனக்கு இளம் வயதில் இருந்து தெரியும். சூர்யகுமார் யாதவ், ஒரு இளம் வீரராக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார். இளம் வீரர் என்பதால் எப்போதுமே ஆக்ரோஷமாக இருப்பார். தற்போது நான் அவரை பார்க்கும் போது முதிர்ச்சி அடைந்த வீரராக இருக்கின்றார்.
ஐபிஎல் தொடரிலோ இந்திய அணிக்கோ சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் வழிநடத்தியது கிடையாது. ஆனால் இந்திய அணிக்காக ஒரு எட்டு போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். அப்போது நான் கிரிக்கெட் வர்ணனையில் இருந்தேன். அதில் சூர்ய குமார் யாதவ் ஒரு கேப்டனாக சிறந்த ஒரு பணியை செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சூர்யகுமார் யாதவும் கேப்டனாக நல்ல பணியை மேற்கொண்டார்.
கேப்டனாக முதலில் இது அவருக்கு கடும் சவால்களை அளிக்கலாம். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்தப் பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஒரு வெற்றிகரமான கேப்டனாக கூடிய அனைத்து தகுதியிலும் அவருக்கு இருக்கின்றது.
தற்போது முழு நேர கேப்டன் என்பதால் சூர்யகுமார் யாதவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்படலாம். இந்த சூழலில் தான் அவர் கம்பீரின் தயவு நிச்சயம் வேண்டும். கம்பீருடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கே கே ஆர் அணிக்கு விளையாடும் போது கம்பீரை சூர்யகுமார் யாதவுக்கு நன்கு தெரியும் என்பதால் இருவரும் பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
- டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- நடனக் கலைஞர் ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழ் சினிமாவில் கோலோச்சி நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும் அவர்களை கவுரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா டிசம்பர் மாதம் 30- ஆம் தேதி, காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடனக் கலைஞர் ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில் எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ,ஶ்ரீதர் மாஸ்டர், அக்ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1950- களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை. நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கவுரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கவுரவிக்கப்படவுள்ளனர். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்படவுள்ளனர்.
மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் ஷரண் ஸ்ரீதர்-சி.என்.ஸ்ரீதர் (ஜிம்கானா கிளப்) ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா-எம்.எஸ்.ஆதித்யா (மைலாப்பூர் கிளப்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் வித்யா ராமச்சந்திரனும் (மைலாப்பூர் கிளப்), வெட்ரன்ஸ் ஒற்றையர் பிரிவில் ஜேக்கப் ராஜ்குமாரும் (டி.என்.சி.ஏ. கிளப்) வெற்றி பெற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்