search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivilliputhur accident"

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த சின்னமாடசாமி மனைவி பூமாரி (வயது 50). இவரது உறவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமத்தில் வசித்து வருகிறார்.

    அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பூமாரி சென்று பார்க்க திட்டமிட்டார். இதற்காக தனது ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகன் எபி (30) என்பவருடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசிசாலையில் பண்டிதன் பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது எதிரே கார் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் பூமாரியும், எபியும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மல்லி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    விபத்து தொடர்பாக சிவகாசியை சேர்ந்த கார் டிரைவர் லட்சுமணன் கைது செய்யப்பட்டார்.

    ×