search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRK"

    • இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.
    • டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

    இந்தியன் 2 திரைப்படம் இந்தியில் இந்துஸ்தான் 2 என வெளியாக இருக்கிறது.

    இதுதொடர்பான டிரைலர் வெளியீட்டு விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது.

    அப்போது, ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தபோது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்ததை நினைவுக்கூர்ந்த கமல்ஹாசன் நன்றிகளையும் தெரிவித்தார்.

    "ஹே ராம்" திரைப்படம் கமல் எழுதி, இயக்கி, தயாரித்து கடந்த 2000ம் ஆண்டில் தமிழ், இந்தி என இருமொழி படமாக வெளியானது. இதில் கமல்ஹாசனும் ஷாருக்கானும் நண்பர்களான சாகேத் ராம் மற்றும் அம்ஜத் அலி கானாக நடித்தனர்.

    டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மேலும் கூறியதாவது:-

    ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்தபோது அவர் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்தார்.

    நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் போது, நாம் அனைவரும் வெறும் மனிதர்கள். நான் ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்க்கவில்லை. அவர் ஒரு சூப்பர் இயக்குநரைப் பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள், ஷாருக் சாஹிப் அந்தப் படத்தை இலவசமாகத் தயாரித்தார். அதை எந்த சூப்பர் ஸ்டாராலும் செய்ய முடியாது.

    அது ஒரு ரசிகரால் மட்டுமே முடியும். கலையின் ஆர்வலர் மற்றும் நல்ல நடிகர். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
    • பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.

    நடந்து முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது. இதன் மூலம் அந்த அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடியோவில் ஷ்ரேயஸ் அய்யர், ஷாருக் கான் படத்தின் "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மற்ற கொல்கத்தா வீரர்களும் நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. 


    • வல்ச்சர் ஸ்டண்ட் விருதுகள் 2023ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது
    • பதான், ஜவான் ஆகிய படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தன

    ஆக்ஷன் திரைப்படங்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருந்தாலும், திரைப்பட விருதுகளில் சண்டை காட்சி பிரிவில் விருது வழங்குதல் குறைவு.

    சிறந்த நடிகர், நடிகையர், வில்லன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும், சண்டை காட்சிகளை வடிவமைப்பவர்களுக்கு மக்களின் பாராட்டுகளே பெரிய விருதாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த வருடத்திலிருந்து அமெரிக்காவின் வாக்ஸ் மீடியா நெட்வொர்க்ஸ் (Vox Media Networks) நிறுவனத்தின் ஒரு அமைப்பான வல்ச்சர் (Vulture) எனும் பத்திரிகை, வல்ச்சர் ஸ்டண்ட் அவார்ட்ஸ் (Vulture Stunt Awards) என திரைப்படங்களில் இடம்பெறும் பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுக்கு பரிசுகள் வழங்க தொடங்கியது.

    சண்டை காட்சிகள் என ஒரே பட்டியலிடாமல், வான்வெளி, தரை, வெடி விபத்து காட்சிகள், சேசிங் என பல உட்பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுவது இதுவரை திரையுலகில் இல்லாத சிறப்பான அம்சம் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    2024க்கான விருதுக்கு 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியான படங்களில் உலகின் முன்னணி ஆக்ஷன் கதாநாயகர்களான டாம் க்ரூஸ் (Tom Cruise) மற்றும் கீனு ரீவ்ஸ் (Keanu Reeves) ஆகியோரின் ஹாலிவுட் படங்கள் பட்டியலில் உள்ளன.

    இந்நிலையில், இந்தி திரையுலக முன்னணி கதாநாயகனான ஷாருக் கான் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "பதான்" (Pathan) மற்றும் "ஜவான்" (Jawan) எனும் இரு படங்களும் போட்டியில் இடம்பெற்றுள்ளன.


    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஜனவரியில் வெளியான பதான், சிறந்த வான்வெளி ஸ்டண்ட் காட்சி மற்றும் சண்டை காட்சி பொது பிரிவு என இரு பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் பதான் ரூ.1055 கோடி வசூல் செய்தது.

    தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் கடந்த செப்டம்பரில் வெளியான ஜவான், சிறந்த வாகன ஸ்டண்ட், ஆக்ஷன் படங்களில் சிறந்த ஸ்டண்ட், சிறந்த ஆக்ஷன் திரைப்படம் என 3 பிரிவுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது.

    உலகளவில் ஜவான் ரூ.1160 கோடி வசூல் செய்தது.

    போட்டியில் இந்திய ஸ்டண்ட் கலைஞர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் மகிழும் வகையில் இப்படங்கள் விருதுகளை வெல்லுமா என்பது மார்ச் 4 அன்று தெரிந்து விடும்.

    • கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்
    • டிசம்பர் 22, 2011 அன்று டான்-2 பட விளம்பரத்திற்காக பாட்னா வந்திருந்தார்

    இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாருக் கான்.

    ஷாருக் கதாநாயகனாக நடித்து, தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கி இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இந்தி திரைப்படம், ஜவான். இப்படத்தை இந்தியாவிலும் உலகெங்கிலும் இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழி திரைப்பட ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பெருமளவில் மக்கள் திரளாக கூடி பாலிவுட் திரையுலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் ஷாருக்கை காண உற்சாகமாக கூடியிருக்கிறார்கள்.

    ஆனால், ஆய்வில் இது தவறு என தெரிகிறது.

    உண்மை என்னவென்றால், ஷாருக் கான் நடித்த டான்-2 எனும் திரைப்படம் டிசம்பர் 23, 2011 அன்று திரையரங்குகளில் வெளியானது.

    அதற்கு முந்தைய நாள், டிசம்பர் 22, 2011 அன்று, அத்திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிக்காக பீகார் தலைநகர் பாட்னாவிற்கு ஷாருக் வந்திருந்தார். அப்போது அவர் பாட்னாவின் முக்கிய குறியீட்டு இடங்களில் ஒன்றான பிஸ்கோமான் பவன் (Biscomaun Bhawan) அருகே உள்ள மவுர்யா ஓட்டலில் தங்கியிருந்தார்.

    அவரை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தனது ரசிகர்களை ஓட்டல் பால்கனியிலிருந்து கண்ட ஷாருக் அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ காட்சியில் மக்கள் வெள்ளத்திற்கு பின்னால் பிஸ்கோமான் பவன் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது தவறுதலாக ஜவான் பட நிகழ்ச்சி எனும் பெயரில் வைரலாகி உள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கும், ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×