search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St Therese of the Child Jesus"

    • புனித தெரேசாவுக்கு அக்டோபர் மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆலயத்தில் திருவிழா ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் வெகு விமரிசையாக நடைபெறும்

    புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் கேரள மாநில கண்ணூர் மாவட்டத்தையொட்டி உள்ளது.

    இங்குள்ள செயிண்ட் தெரேசா தேவாலயம் தென்னிந்தியாவின் முக்கிய புனிதத் தலமாக விளங்குகிறது. புனித தெரேசாவின் திருவுருவத்தோடு வந்த ஒரு கப்பல் மாகி கடலோரம் வந்தபோது திடீரென்று அங்கிருந்து நகர மறுத்து விட்டதாம்.

    இதனால், அப்பகுதி மக்கள் புனித தெரேசாவின் திருவுருவத்தைத் நம் நகரில் நிறுவி, அதற்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளனர். எனவே, திருவுருவம் கப்பலிலிருந்து இறக்கப்பட்டது. கப்பலும் நகரத் தொடங்கியது.

    புதிதாகக் கட்டிய கோவிலில் புனித தெரேசாவின் திருவுருவம் நிறுவப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் புனித தெரேசாவுக்கு அக்டோபர் மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து புனித அன்னையின் அதிசய உருவம் ரகசிய அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் வழிபாட்டிற்காக 17 நாட்கள் வைக்கப்பட்டது.

    இறுதி நாளில் முக்கிய நிகழ்வாக அன்னையின் உருவம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது இந்து வழிபாட்டில் உள்ளது போல் மலையாள மொழி பேசும் மக்கள் அங்கபிரதட்சணம் செய்து அன்னையை வழிப்பட்டனர்.

    ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் வெகு விமரிசையாக நடைபெறும் விழாவில் புதுவையின் மாகி மட்டுமல்லாது அருகில் உள்ள கேரள மாநில மக்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.

    கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் அங்கபிரதட்சணம் செய்து அன்னையை வழிப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

    • விழா தொடர்ந்து வருகிற 9-ந்தேதி வரை நடக்கிறது.
    • விழாவில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

    கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 99-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் மேள வாத்தியங்கள் முழங்க கொடி பவனியாக எடுத்து வரப்பட் டது. தொடர்ந்து ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது.

    நிகழ்ச்சியில் குழித்துறை மறைமாவட்ட முதன்மைச் செயலாளர் அருட்பணியாளர் டாக்டர் ப. ரசல்ராஜ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். தொடர்ந்து அன்பின் விருந்து, பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக காலையில் முன்னோர் நினைவு திருப்பலி, கல்லறைத் தோட்டம் மந்திரிப்பு, ஜெபமாலை, குணமளிக்கும் திருப்பலி ஆகியவையும் நடந்தது.

    விழாவில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குப்பேரவை மற்றும் புனித அன்னை தெரேசா நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். விழா தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.

    • வருகிற 8-ந் தேதி தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது.
    • 9-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    காரைக்குடி செஞ்சை பகுதியில் புனித தெரசாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா ஒரு வார காலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த விழா சரிவர நடக்கவில்லை. இந்தாண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோ ணிச்சாமி அர்ச்சிப்பு செய்து கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி தினந்தோறும் திருச்ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நிகழ்ச்சி வருகிற 8-ந்தேதி மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர் நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. ஆலயத்தில் இருந்து புறப்படும் தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தில் நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழக ஆயர் பேரவை துணைத்தலைவர், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி ஆற்றுகிறார்.

    9-ந்தேதி காலை முதல் திருவிருந்து விழா, திருப்பலி நிகழ்ச்சியுடன் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு பணியாளர் அருட்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் சிவகங்கை முன்னாள் மாவட்ட முதன்மை குரு அருளானந்தம், அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பணிக்குழுக்கள், செஞ்சை பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

    • நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தில் புனித குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது.
    • விழாவின் இறுதி நாளான 2-ந்தேதி திருவிழா திருப்பலி நடக்கிறது.

    நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தில் புனித குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி அருட்பணியாளர் அந்தோணி முத்து தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

    தூய சவேரியார் தாதியர் கல்லூரி அருள்பணியாளர் ஜெயப்பிரகாஷ் மறையுரை வழங்கினார். இரவில் அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் வருகிற 1-ந் தேதி காலை 8 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையில் திருப்பலி, திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து வழங்குதல் நடக்கிறது.

    மாலையில் நற்கருணை ஆசீர், தேர்ப்பவனி நடைபெறும். விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு அம்சி அருட்பணியாளர் காட்வின் சவுந்தரராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அன்பின் விருந்து மற்றும் மறைகல்வி மன்ற ஆண்டுவிழா கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளர்கள், ஆலய பங்குமக்கள், பங்கு அருட்பணிபேரவை, அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.

    • திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 9-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளையில் குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு பங்கு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, 7.30 மணிக்கு கல்லறைத் தோட்டம் அர்ச்சிப்பு, மாலை 5 மணிக்கு கொடிபவனி, 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது.

    நாளை மறுநாள் காலை 6:30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். 2-ந் தேதி காலை 7 மணிக்கு நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குனர் அருட்பணியாளர் ஜெரால்டு ஜெஸ்டின் தலைமையில் மறைக்கல்வி மன்ற சிறப்புத் திருப்பலி நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, பொதுக்கூட்டம் போன்றவை நடக்கிறது. 8-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 9-ந் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி, 10 மணிக்கு மலையாளத் திருப்பலி, 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ. சகாயஜஸ்டஸ், இணைப் பங்குதந்தை ரா.சத்தியநாதன், பங்கு இறைமக்கள், அருட்பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர்.

    • விழா வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.
    • வருகிற 1-ந்தேதி தேர்ப்பவனி நடைபெறும்.

    நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசாள் ஆலய திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. விழா வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சியில் வெட்டுவெந்தி ஆலய அருட்பணியாளர் அந்தோணி முத்து தலைமை தாங்குகிறார். தூய சவேரியார் தாதியர் கல்லூரி அருட்பணியாளர் ஜெயப்பிரகாஷ் மறையுரை நிகழ்த்துகிறார். பின்னர், அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 30-ந் தேதி வெள்ளையம்பலம் அருட்பணியாளர் ஜஸ்டின் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பலி நடைபெறும்

    .வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமையில் திருப்பலி, திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து வழங்குதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். தேர் பவனியானது ஆலயத்தில் இருந்து தொடங்கி காஞ்சாம்புறம், செங்கோடு, கோட்டுவிளை, மாம்பழஞ்சி, நீர்விளாகம், பாலாமடம், நித்திரவிளை வழியாக ஆலயம் வந்தடையும்.

    2-ந் தேதி காலை 9 மணிக்கு அருட்பணியாளர் காட்வின் சவுந்தரராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் காட்வின் செல்ல ஜஸ்டஸ் மறையுரையாற்றுகிறார். பகல் 11 மணிக்கு அன்பின்விருந்து நடக்கிறது. மதியம் 2 மணிக்கு இளையோர் இயக்கம் நடத்தும் வினாடி வினா போட்டி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்சிகள் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருள் சகோதரிகள், பங்கு அருட்பாணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா அடுத்த மாதம் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    அழகியமண்டபம் அருகே உள்ள செட்டிச்சார்விளை இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தக்கலை மறை மாவட்டம் ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.

    தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடந்தது. அருட்பணியாளர் சகாய தாஸ் மறைவுரையாற்றினார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    • திருவிழா இன்று தொடங்கி அக்டோபர் 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 1-ந்தேதி அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறும்.

    அழகியமண்டபம் அருகே உள்ள செட்டிசார்விளையில் இயேசுவின் தூய குழந்தை தெரசா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சகாய தாஸ் மறையுரை ஆற்றுகிறார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வகிக்கிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 1-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ரபேல் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறும். நிகழ்ச்சியில் அருட்பணியாளர் ஜெபஸ்டின் ஜெரால் தலைமை தாங்குகிறார். மனித உரிமை வக்கீல் அருட்பணியாளர் எம்.சி.ராஜன் மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி, வானவேடிக்கை போன்றவை நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 2-ந்தேதி காலையில் ஆடம்பர சிறப்பு திருப்பலி அருட்பணியாளர் திசை ஜெரி தலைமையில் நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்தும், மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்றஆண்டு விழாவும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை டேவிட் மைக்கேல், இணை பங்கு தந்தை ஏட்வர்ட்லெனின், பங்கு பேரவை உதவி தலைவர் பெலிக்ஸ் ஆன்றோ, செயலாளர் மரிய ராஜேஷ், துணைச் செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் விமலா மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    ×