search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "start up"

    • நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.
    • அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    கர்நாடகாவில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஸ்டார்ட் அப்களை கொண்ட நகரமாக பெங்களூரு இருந்து வருகிறது. தங்களின் வருமானம் தருகின்ற நிலையான வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்க பலர் ஆர்வமாக முன்வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், புதிய தொழில்களைத் தொடங்குவது என்பது ஒரு ஆபத்தான சமாச்சாரம். அதுவும் நிலையான வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலில் இறங்கப் பலர் யோசிக்கின்றனர்.

     

    புதிய தொழில் தொடங்குவதால் பல சமயங்களில் பொருளாதார சிக்கல்களில் அவர்கள் மாட்டிக்கொள்கின்றனர். எனவே அவர்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு இந்த மாதாந்திர உதவித்தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது புதிதாகத் தொழில்முனைவோர் அன்றாட செலவுகளைப் பற்றி யோசிக்காமல் தொழிலை வளர்ப்பதில் கவனம் செலுத்த உதவும்.

    ஆனால் இந்த திட்டம் எந்த அளவு வெற்றி பெறுகிறது என்பதை அது செயல்படுத்தப்பட்ட பிறகே பார்க்க முடியும். உதவித்தொகை உரிய தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படும். யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இது சென்று சேர வேண்டும். இதைத்தவிர்த்து தொழில் சார்ந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கு அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
    • புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    பராமரிப்பு பணிகள்

    இந்த நிலையில் தற்போது புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    1-வது யூனிட்

    இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.
    • றைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில், தொழில் தொடங்க விரும்பு வோரை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் புதிய திட்டம் செயல்படுத்தப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன டைய விண்ணப்பிப்போர், பொதுபிரிவினர் வயது 18 முதல் 45 வரையிலும், பெண்கள் எஸ்.சி, எஸ்.டி, பி.சி, எம்.பி.சி, சிறு பான்மையினர் திரு நங்கை கள், மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 55 வயது வரையிலும், குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியும், வேலை வாய்ப்பு விசா வுடன் 2 ஆண்டு களு க்கு குறையா மல் வெளி நாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

    1.1.2020 அல்லது அதற்கு பிறகு வெளி நாட்டிலிருந்து தமிழ்நாடு திருப்பி யவராக இருத்தல் வேண்டும். தொழில் தொடங்கு வோருக்கு அதிகபட்ச திட்ட செலவு உற்பத்தி துறைக்கு ரூ.15 லட்சமும், அதிகபட்ச திட்ட செலவு சேவை மற்றும் வணிக துறைக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.

    தொழில் தொடங்கு வோரின் பங்களிப்பாக பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும், அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் என அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

    விண்ணப்பிப்போர் பாஸ்போர்ட், விசா நகல், கல்விச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிசான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று ஆகிய வற்றின் நகல்கள் மற்றும் திட்ட விபரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் அல்லது தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×