என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Steven Smith"
- 2023 சீசனில் ஸ்டீவன் சுமித் விளையாடவில்லை.
- 2024 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவர் ஏலம் எடுக்கவில்லை.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவரால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முடியவில்லை. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
இதன்காரணமாக 2024 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த முறையும் இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் அதிகாரப்பூர்வ ஆங்கில வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக மைக் பிடித்து வர்ணனை செய்ய இருக்கிறார். இந்திய வீரர் முரளி கார்த்திக் இதற்கு முன்னதாக வியைளாடிக் கொண்டிருக்கும்போது வர்ணனை செய்துள்ளார். அதேபோல் சுமித் தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
இவருடன் ஹர்ஷா போக்லோ, சுனில் கவாஸ்கர், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைடன் டவுல், ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹெய்டன், தீப் தாஸ் குப்தா, அன்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.
- உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
- கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.
களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.
பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார்.
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார்.
- ஸ்மித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.
டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் சிட்னி விரைந்தார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.
அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.
இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ம் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ம் தேதியும் நடக்கிறது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஸ்டீவன் சுமித் நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா
- இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் ஆகியோர் சதமடித்தனர்.
- இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட் வீழ்த்தினார்.
கல்லே:
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய லபுசேன், ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடியது. லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 12 ரன்னிலும், கேமரூன் கிரீன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லபுசேன், ஸ்மித் ஜோடி 134 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தும் சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 109 ரன்னுக்டன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்ய 3 விக்கெட்டும், ரஜிதா, மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்