என் மலர்
நீங்கள் தேடியது "streams"
- ராஜபாளையத்தில் நீரோடைகள் தூர்வாரப்பட்டது.
- பூங்கா ஒன்றில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி 42-வது வார்டில் ஆர்.ஆர். நகர் மற்றும் ஆண்டாள்புரம் பகுதிகளில் நீரோடை நீண்டகாலாமாக சுத்தம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இதனால் நீரோடைகள் சேறும் சகதியுமாய் புதர்மண்டி கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மேற்படி நீரோடைகளை தூர்வாரி சுத்தம் செய்து தரக் கோரி நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாமிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நகர்மன்ற தலைவி பவித்ராஷியாம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீரோடையை தூர்வாரி சுத்தம் செய்ய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். நவீன கனரக ராட்சத எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டது. நீரோடையின் தற்போதைய நிலையை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுடன் நேரில் பார்வையிட்டார்.
நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த அவரை அப்பகுதி மக்கள் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.