என் மலர்
நீங்கள் தேடியது "student arrested"
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் வேலாயுதம் (வயது 26). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பி.எச்.டி.படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.
மாணவர் வேலாயும் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்தை மாணவிக்கும், தனது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் சமூக வலைத் தளங்களிலும் அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச படத்தை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
திருவொற்றியூர் சுங்க சாவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கி ‘6டி’ மாநகர பஸ் புறப்பட்டு சென்றது. தண்டையார்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் பயணம் செய்தனர்.
தியாகராஜர் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்கும் போது உள்ளே இருந்த மாநில கல்லூரி மாணவர்கள் வெளியில் நின்ற மாணவர்களை பார்த்து கிண்டல் செய்தனர். அப்போது பஸ் புறப்பட துவங்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் பஸ்சை விரட்டிச் சென்று பஸ்சுக்குள் ஏற முயன்றனர். ஆனால் பஸ் நிற்கவில்லை.
உடனே ஆவேசத்தில் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். கல்வீசிய மாணவர்களை பிடிக்க பயணிகள் முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவர்கள் ஓடிவிட்டனர்.
இதுபற்றி டிரைவர் ராஜேந்திரன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர் மகேஷ் என்பவரை கைது செய்தனர். இவர் தியாகராஜர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார்.
மேலும் 6 மாணவர்களை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினார்கள்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பரன்போரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் தேவ் தாட்வி(14) என்னும் 9-ம் வகுப்பு மாணவன் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது தலை மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அருகில் ஒரு கத்தியும் கிடந்தது. எனவே, மாணவனை யாரோ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.
இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பள்ளிக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த மாணவனுக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனவே, அந்த மாணவன் ஆத்திரத்தில் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்த மாணவன் தலைமறைவாகிவிட்டதால், அவனைத் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த மாணவன் மிஹிர் சுனாரா(15) என்பவனை போலீசார் கைது செய்துள்ளதாக வதோதரா நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் சசிதர் இன்று தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மாணவன் அருகாமையில் உள்ள ஆனந்த் மாவட்டம், பக்ரோல் பகுதியை சேர்ந்தவன். வதோதராவில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. #Vadodaraschoolmurder #studentkilledintoilet #GujaratStudentKilled