search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student commits suicide"

    • மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
    • செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த பயிற்சி டாக்டர் சுஜிர்தா கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி டாக்டரின் தந்தை தூத்துக்குடி வியாபாரி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில் 3 டாக்டர்களின் பெயர்களை எழுதி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. முதலில் கல்லூரியின் போராசிரியர் டாக்டர் பரமசிவம், பாலியல் தொந்தரவு செய்து உடல் ரீதியாகவும் மண ரீதியாகவும் தொந்தரவு செய்தாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் முதுகலை பயிற்சி டாக்டர்கள் ஷரிஷ், பிரித்தி ஆகியோரும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், தக்கலை துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் கடந்த 3 நாட்களாக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சுஜிர்தா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் புகார் கூறப்பட்டுள்ள பயிற்சி டாக்டர் ஹரிஸ், இங்கு இல்லை என்பதும் அவர் தனது சொந்த ஊரான சென்னையில் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சென்னை சென்றுள்ளனர்.

    இதற்கிடையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் பிரித்தி ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி நியமிக்கப்படுள்ளார். அவர் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறை அவரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகிறார். செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்

    மேலும் கல்லூரி மாணவி தற்கொலை சம்பந்தமாக யாராவது தகவல் தெரிவிக்க விரும்பினால் 9498195077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    • வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் இவர் அதே ஊரை சேர்ந்த சிவக்கு மார்(19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

    அவரிடமிருந்து பிரித்து வந்ததால் வேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • 2 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார்.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பாடத்தை மீண்டும் தேர்வு எழுதினார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நர சிம்மநாயக்கன் பாளையம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் தனபால் (வயது 47). கட்டிட தொழிலாளி.

    இவரது மகள் கிருத்திகா (18). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்த நிலையில் அவர் 2 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பாடத்தை மீண்டும் தேர்வு எழுதினார். ஆனால் மீண்டும் அதில் தோல்வி அடைந்தார். இதனை நினைத்து அவர் சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெய அவினேஷ் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

    கோவை,

    திருவாரூர் மாவட்டம் கிழசேரியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். தி.மு.க. பிரமுகர். இவரது மகன் ஜெய அவினேஷ் (வயது 18). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.இதற்காக அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த ஜெயஅவினேஷ் வயிறு வலிப்பதாக நண்பர்களிடம் கூறி உள்ளார். பின்னர் சீரகத்தை சாப்பிட்டார். ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் ஜெய அவினேஷ் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    விடுதியில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தற்கொலை செய்வதற்கு முன்பு ஜெயஅவினேஷ் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது அம்மா என எழுதி இருந்தார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்த போது பெண் ேதாழி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில் அது என்ன ரொம்ப தொல்ல பண்ணுது நான் போறேன் என அனுப்பி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் ஜெய அவினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள வண்ணான் கோவிலை சேர்ந்தவர் பிரதீப் இவரது மகன் அறிவரசு (வயது 16 ). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று மாலை அறிவரசு வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் சிறிது நேரம் தனது பாட்டியுடன் பேசிவிட்டு வீட்டில் உள்ள அறைக்கு சென்றார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அறிவுரசு தூக்கில் பிணமாக தூங்கினார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிறந்த நாளுக்கு தந்தை லேப்டாப் வாங்கிதரததால் பல்கலைக்கழக மாணவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • பத்துக்கண்ணு சவுந்தர்யா கோல்டன் சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்துராமன்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு சவுந்தர்யா கோல்டன் சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்துராமன். இவர் கோரிமேட்டில் உள்ள உணவு மற்றும் மருந்து ஆய்வு துறையில் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார்.

    இவரது மூத்த மகன் மாறன் (வயது 19). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். மாறன் சிறு வயது முதலே பிடிவாதம் கொண்டவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தந்தையிடம் பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுக்குமாறு வலியுறுத்துவார். அப்படி வாங்கித் தராவிட்டால் பிரச்சனை செய்வார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாளின் போது மாறனுக்கு அவரது தந்தை புதியதாக சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அதனை மாறன் மட்டுமே உபயோகப் படுத்தி வந்தார். அவரது சகோதரர் யோகேஸ்வரனுக்கு சைக்கிளை கொடுக்க மாட்டார். ஒரு முறை சைக்கிளை யோகேஸ்வரன் ஓட்டியபோது இதனை பார்த்த மாறன் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார். அதுபோல் ஒரு பிறந்தநாளின் போது தந்தை செல்போன் வாங்கித் தராததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் இந்த வருட பிறந்த நாளுக்கு லேப்டாப் வாங்கித் தரும்படி தனது தந்தையிடம் மாறன் வலியுறுத்தி வந்தார். அதற்கு அவரது தந்தையும் ஒரு சில நாட்களில் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாறன் நான் கேட்ட உடனேயே தந்தை லேப்டாப் வாங்கிதரவில்லையே என விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இரவு வழக்கம் போல் மாறன் சாப்பிட்டு விட்டு வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். எதச்சையாக அவரது பெரியப்பா மகன் ராஜகிரி மாடிக்கு சென்று மாறனை பார்க்க சென்றார். அப்போது மயக்க நிலையில் இருந்த மாறனிடம் ராஜகிரி விசாரித்த போது லேப்டாப் வாங்கி தராததால் தந்தையை மிரட்ட எலி மருந்து தின்று விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜகிரி உடனடியாக இது பற்றி தனது சித்தப்பா குடும்பத்தாரிடம் கூறினார். பின்னர் உடனடியாக மாறனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாறன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×