search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பல்கலைக்கழக மாணவர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    பல்கலைக்கழக மாணவர் தற்கொலை

    • பிறந்த நாளுக்கு தந்தை லேப்டாப் வாங்கிதரததால் பல்கலைக்கழக மாணவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    • பத்துக்கண்ணு சவுந்தர்யா கோல்டன் சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்துராமன்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு சவுந்தர்யா கோல்டன் சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முத்துராமன். இவர் கோரிமேட்டில் உள்ள உணவு மற்றும் மருந்து ஆய்வு துறையில் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார்.

    இவரது மூத்த மகன் மாறன் (வயது 19). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். மாறன் சிறு வயது முதலே பிடிவாதம் கொண்டவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தந்தையிடம் பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுக்குமாறு வலியுறுத்துவார். அப்படி வாங்கித் தராவிட்டால் பிரச்சனை செய்வார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நாளின் போது மாறனுக்கு அவரது தந்தை புதியதாக சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். அதனை மாறன் மட்டுமே உபயோகப் படுத்தி வந்தார். அவரது சகோதரர் யோகேஸ்வரனுக்கு சைக்கிளை கொடுக்க மாட்டார். ஒரு முறை சைக்கிளை யோகேஸ்வரன் ஓட்டியபோது இதனை பார்த்த மாறன் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார். அதுபோல் ஒரு பிறந்தநாளின் போது தந்தை செல்போன் வாங்கித் தராததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் இந்த வருட பிறந்த நாளுக்கு லேப்டாப் வாங்கித் தரும்படி தனது தந்தையிடம் மாறன் வலியுறுத்தி வந்தார். அதற்கு அவரது தந்தையும் ஒரு சில நாட்களில் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மாறன் நான் கேட்ட உடனேயே தந்தை லேப்டாப் வாங்கிதரவில்லையே என விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இரவு வழக்கம் போல் மாறன் சாப்பிட்டு விட்டு வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். எதச்சையாக அவரது பெரியப்பா மகன் ராஜகிரி மாடிக்கு சென்று மாறனை பார்க்க சென்றார். அப்போது மயக்க நிலையில் இருந்த மாறனிடம் ராஜகிரி விசாரித்த போது லேப்டாப் வாங்கி தராததால் தந்தையை மிரட்ட எலி மருந்து தின்று விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜகிரி உடனடியாக இது பற்றி தனது சித்தப்பா குடும்பத்தாரிடம் கூறினார். பின்னர் உடனடியாக மாறனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாறன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×