என் மலர்
நீங்கள் தேடியது "stunts"
- பாளை வ.உ.சி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவக கடைகள் அமைக்கப்படும்.
- இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் வாலிபர்கள் சிலர் தினமும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை:
பாளை வ.உ.சி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவக கடைகள் அமைக்கப்படும்.
ஆபத்தான சாகசம்
இரவில் வேலைக்கு சென்று வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த கடைகளில் உணவருந்தி வருகின்றனர். குறிப்பாக வேலைக்கு சென்று வரும் இளம் பெண்கள் பலர் இந்த கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் வாலிபர்கள் சிலர் தினமும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விபத்து அபாயம்
நேற்று இரவும் வாலிபர் ஒருவர் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளின் முன்புற சக்கரத்தை மேலே அந்தரத்தில் தூக்கி விட்டு பின்பக்க சக்கரத்தை மட்டும் தரையில் தொடும்படி ரேஸ் செய்து கொண்டே சென்றுள்ளார்.
இதனால் அந்த சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாகசம் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நடவடிக்கை பாய்கிறது
இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கூறுகையில், சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் பதிவெண் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதலில் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்னர் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இளைஞர்கள் சாகசம் செய்வதிலும், உயிரை துச்சமென எண்ணி, சில அசாத்திய காரியங்களில் ஈடுபடுவதும் இப்போது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதுவும், மின்சார ரெயில்களில் படிகட்டில் தொங்கியபடி செய்யும் விபரீத சாகசங்கள் காண்போரை அச்சத்தில் ஆழ்த்துகிறது. சில சமயங்களில் அதனால் ஏற்படும் மிகப்பெரிய பின்விளைவுகள் சாகசம் செய்வோரையும், குடும்பத்தாரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.
ஆண்கள் மட்டும்தான் இதுபோன்ற வீண் சாகசங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், பெண்களும் தற்போது இதுபோன்றவற்றில் களமிறங்கிவிட்டனர். மும்பை நகரில், துறைமுகம் வரை இயக்கப்படும் மின்சார ரெயிலில் ரே சாலை ரெயில் நிறுத்தத்தில் இருந்து காட்டன் கிரீன் ரெயில் நிலையம் வரை இளம் பெண் செய்த சாகசம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ரே சாலை ரெயில் நிலையத்தில் தனது நண்பர்களுடன் ஏறிய இந்த இளம் பெண், காட்டன் கிரீன் நிலையம் வரும் வரை படிகட்டில் தொங்கியபடி, கடந்துசெல்லும் ரெயில்வே தடுப்புகளை தொடும் மிக மோசமான முயற்சியில், மிக உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். இதனை அந்த ரெயிலியில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.