search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subash Pannaiyar"

    • கனிமொழி எம்.பி.அமைச்சர் கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து சுபாஷ் பண்ணையார் அழைப்பிதழ் வழங்கினார்.
    • பனங்காட்டு மக்கள் கழக மாநில வக்கீல் அணி செயலாளர் சிலுவை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    அகில இந்திய நாடார்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் மூலக்கரை என். வெங்கடேஷ் பண்ணையார் 19-ம் ஆண்டு வீரவழிபாடு நிகழ்ச்சி நாளை (திங்கட்கிழமை) தூத்துக்குடி அருகேயுள்ள மூலக்கரை அம்மன்புரத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில தி.முக.மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோரை நேரில் சந்தித்து பனங்காட்டு மக்கள் கழகம் நிறுவனத்தலைவர் சுபாஷ் பண்ணையார் அழைப்பிதழ் வழங்கினார்.

    அப்போது பனங்காட்டு மக்கள் கழக மாநில வக்கீல் அணி செயலாளர் சிலுவை, தென்மண்டல செயலாளர் சொர்ணவேல்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஓடை செல்வம், வடக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ஜோதிராஜா, தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார், மற்றும் லிங்கராஜா, அல்பட், படப்பை சுரேஷ், தங்கராஜ், அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×