என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sudarshan Patnaik"
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 29 அரைசதங்களுடன் 8,676 ரன்கள் குவித்துள்ளார். 288 ஒருநாள் போட்டியில் 48 சதங்கள், 70 அரைசதங்களுடன் 14,444 ரன்கள் குவித்துள்ளார். 115 டி20 போட்டியில் ஒரு சதம், 37 அரைசதங்களுடன் 2,905 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெங்களூர் மராத்தாஹள்ளியில் உள்ள வக்தேவி விலாஸ் கல்வி நிறுவன வளாகத்தில் வாஜ்பாயின் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கியுள்ளார். அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #SudarsanPattnaik #SudarsanSand