search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sue"

    • விருதுநகர் அருகே கணவர், கர்ப்பிணி மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
    • 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சிவகாமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா தேவி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை முனீஸ்வரன் வீட்டில் ஏற்றுக் கொண்ட னர். ஆனால் சுஷ்மிதா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரனின் உறவி னர்கள் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரனின் பெற்றோர் வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் சுஷ்மிதா தேவி கர்ப்ப மடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சுஷ்மிதா தேவியின் பெற்றோர் சமாதானம் அடைந்து தலை தீபா வளிக்கு தம்பதிகளை முறைப்படி அழைத்துச் சென்றனர். சுஷ்மிதா தேவி கர்ப்பமாக இருப்பதால் ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். அவரைப் பார்க்க முனீஸ்வ ரன் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று முனீஸ்வரன் தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கல வடியான்-ராதா தம்பதி யின் மகன் மோகன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை கிண்டல் செய்து பேசியுள்ளார். இது குறித்து சுஷ்மிதா தேவியின் பெற்றோரிடம் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முனீஸ்வரன், சுஷ்மிதா தேவி மற்றும் அவரது பெற்றோர் மோகனின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளனர்.

    அப்போது மோகனின் குடும்பத்தாரும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த உறவினர்களும் மோகனுக்கு ஆதரவாக அங்கு திரண்ட னர். இருதரப்புக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரனை மண்வெட்டி கம்பால் அவர்கள் தாக்கி னர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதை தடுப்பதற்காக குறுக்கே புகுந்த சுஷ்மிதா தேவியையும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மோகன், அவரது பெற்றோர், சக்தி வேல், வனிதா, வில்லரசி, கற்பகமணி, மாரியம்மாள், முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

    அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து, 16 மாநிலங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #DonaldTrump #Emergency
    கலிபோர்னியா:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு பாராளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.



    ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கான நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்ட அவர், இது தொடர்பாக செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

    நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சமூக குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்ட நடவடிக்கை மூலம் அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். அதன்படி, கலிபோர்னியா தலைமையில் 16 மாநிலங்கள் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளன. கலிபோர்னியா வடக்கு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டின் அவசரநிலையை அறிவித்திருப்பது அரசியலமைப்புக்கு விரோதமான செயல் என்றும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், டிரம்பின் அவசர நிலை பிரகடனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளனர்.

    ஜனாதிபதியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும், மக்களின் வரிப்பணத்தை திருடுவதையும் தடுப்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர் சேவியர் பெசிரா தெரிவித்தார். #DonaldTrump #Emergency 
    தனது சம்மதம் இன்றி தன்னை பெற்றதாக பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக மும்பையை சேர்ந்த வாலிபர் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ManSuingParents
    மும்பை:

    செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத் தான். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை பேறுக்காக ஏங்கித் தவிப்பார்கள். மனித குலத்தின் நீடிப்பே குழந்தைகள் பிறப்பதில் தான் இருக்கிறது.

    குழந்தை பாக்கியத்தின் மகத்துவம் இவ்வாறு இருக்க, உயிர் பிறப்புக்கு எதிரான கொள்கையுடைய மும்பை வாலிபர் ஒருவர் தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

    மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் (வயது 27) என்ற வாலிபர் தான் தனது பெற்றோருக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் போலி தாடி, மீசை மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு ‘யூ-டியூப்'பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், இந்த உலகில் பிறக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை. எனவே அவர்களின் வாழ்க்கைக்கு பெற்றோர் தான் உதவ வேண்டும்.

    உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாம் இந்த உலகில் நமது சம்மதம் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டு உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    எனவே நாம் எதற்கும் பெற்றோருக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. நாம் வாழ்வதற்கு அவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தைகளை முதலீடாகவோ அல்லது காப்பீட்டு திட்டங்களாகவோ கருதக்கூடாது என்று கூறியுள்ளார்.

    மேலும் பேஸ்புக் பதிவில், ‘தங்களது சுகத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    ‘மனநல ஆஸ்பத்திரியில் சேரும்படி' அவரை ஒருவர் பேஸ்புக்கில் விளாசி உள்ளார்.

    ரபேல் சாமுவேலின் அறிவிப்பு குறித்து அவரது தாய் கவிதா கர்னட் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், ‘‘அவரது சம்மதத்தை பெற்று அவரை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினால், நான் எனது தவறை ஒப்புக் கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். #ManSuingParents

    ×