என் மலர்
நீங்கள் தேடியது "sugarcane cutting work"
- கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
- பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பொரசப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனம் புதூர் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.