என் மலர்
நீங்கள் தேடியது "suicide mother in law"
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மனைவி சரோஜா (வயது 60).
இன்று காலை சரோஜா தனது வீட்டில் வைத்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் காப்பாற்றுவதற்குள் சரோஜா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் விசாரணையில் சரோஜாவுக்கும், அவரது மருமகளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததும் இதில் மனவேதனை அடைந்த சரோஜா தீக்குளித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சரோஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.