என் மலர்
முகப்பு » suidide
நீங்கள் தேடியது "suidide"
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்தவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- நிலக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியை சேர்ந்தவர் மதுரைவீரன்(43). கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்தார்.
இவரது மனைவி அம்மையநாயக்கனூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதுரைவீரன் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜிடம் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த மதுரைவீரனுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
×
X