என் மலர்
நீங்கள் தேடியது "summons"
- துருவ் ரத்தியின் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
- ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
பிரபல யூடியூபர் துருவ் ரத்தி தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருடைய வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஜூலை 7 அன்று 'கோடி யூடியூபர்களுக்கு என்னுடைய பதில்' என்று ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், என்னை வன்முறையாளர் என்று தவறாக ட்ரோல் செய்ததாக துருவ் ரத்தி மீது பாஜகவின் மும்பை பிரிவின் செய்தித் தொடர்பாளர் நகுவா டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு நீதிபதி குஞ்சன் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக துருவ் ரத்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
- ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு.
- இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது.
லக்னோ:
ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
இந்த நடை பயணத்தின் போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போதே ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த லக்னோ கோர்ட்டு மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
- சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
- வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்
நடிகை விஜயலட்சுமி அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி, வரும் 27ம் தேதி காலை 10 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ஏப்ரல் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இன்று திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில், 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #BarNagaraj


அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை.
இந்த முறையும் அமைச்சரின் உதவியாளர் ஆஜராகவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. #Gutkhascam #CBI #MinisterVijayabaskar
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளில் சிக்கி தவிக்கிறார். அவரும் அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன், உசேன் ஆகியோரும் ஊழல் செய்து குவித்த பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக ஊழல் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.

இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் மகன்கள் ஹசன், உசேன் ஆகியோர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாத நிலையில் அவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரித்து, நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மரியத்துக்கு 7 ஆண்டு, கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அதையடுத்து அவர்கள் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருப்பினும், நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களும், ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அத்தார் மினல்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப், அவர்கள் 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தனர். அவர்களுக்கு ஜாமீனும் வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்களை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.
அந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வின் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அதை அவர்கள் விசாரணைக்கு ஏற்றனர்.
மேலும் அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீனில் விடுவித்தது செல்லுமா என்பதுபற்றிய விசாரணையை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக நடந்த முதற்கட்ட விசாரணையின்போது, நீதிபதிகளிடம் நவாஸ் ஷெரீப் தரப்பு வக்கீல் ஹாரிஸ், “நான் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகன் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறேன். எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதையடுத்துதான் விசாரணை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் வேடிக்கையாக, “எனக்கு உடல் நலம் சரியில்லை. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நீங்கள் (ஹாரிஸ்) ஆஜராவதால்தான் எனக்கு படபடப்பு அதிகமாக இருக்கிறது என்று எனது டாக்டர்கள் சொல்கிறார்கள்”என குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து கோர்ட்டில் எல்லோரும் சிரித்து விட்டனர். எனவே, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகுமா என்பது அடுத்த மாதம் 12-ந் தேதி தெரிய வரலாம்.
மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதற்காக தனது செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.
ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். #BJP #RamKadam
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
இருவரும் வருகிற 4-ந்தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இதேபோல டாக்டர்களிடம் 4,5 மற்றும் 6-ந்தேதிகளில் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜிடம் சசிகலா தரப்பு வக்கீல் வருகிற 6-ந்தேதி குறுக்கு விசாரணை செய்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.
மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகள் ராஜமாதங்கி, அவரது கணவர் பி.எஸ்.ஜெ.விக்ரம் ஆகியோரிடம் 6-ந்தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. #JayaDeathProbe #Deepa #Madhavan
ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு வழங்கியதில் ஊழல் நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அப்போதைய அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக அதில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் ரெயில்வே வாரிய உறுப்பினர் அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதி அரவிந்த் குமார் நேற்று சம்மன் அனுப்பினார். #LaluPrasadYadav #RailwayHotelTender #tamilnews
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகள் இடையே பணியாற்றியவர், ஆசாத் துரானி இவர், ‘உளவு வரலாற்றுக் கூறு; ரா, ஐ.எஸ்.ஐ. மற்றும் அமைதியின் மாயை’(தி ஸ்பை குரோனிக்கல்ஸ், ரா, ஐ.எஸ்.ஐ. அண்ட் தி இல்லுயூசன் ஆப் பீஸ்) என்னும் புத்தகத்தை இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வின் முன்னாள் தலைவரான அஸ் துலாத்துடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகம் பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
எதிரி நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் இணைந்து உளவு பார்ப்பது குறித்த தகவல்களை எப்படி புத்தகமாக எழுதி வெளியிடலாம்? என்று இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. அதையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் இது ராணுவ நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை ஆசாத் துரானி மறுத்தார்.இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது. #AsadDurrani #PakistanArmy