என் மலர்
நீங்கள் தேடியது "Supreme Court"
- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதுகுறித்து விவாதிக்க விரும்புகிறார்.
- இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.
புதுடெல்லி:
பாராளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவுத் தரவுகளை அதன் இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.
இந்த மனுக்களை திரிணாமுல் காஙகிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா மற்றும் என்ஜிஓ அமைப்பும் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சந்தித்து இந்தக் குறையை விவாதிக்க விரும்புவதாக தெரிவித்தார். புதிய தலைமை தேர்தல் ஆணையர் இப்போது இருக்கிறார். மனுதாரர்கள் அவரைச் சந்தித்து இது குறித்து விவாதிக்கலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒரு விசாரணையை நடத்தி அதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும்
வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவை அதன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்ததை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொண்டு, மனுதாரர்கள் 10 நாட்களுக்குள் தேர்தல் குழு முன் பிரதிநிதித்துவங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்டது.
இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.
- முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் கூறினார்.
- தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்- தமிழக அரசு
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நியாயமானதாக இல்லை. கவர்னரிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதில் சிக்கல் உள்ளது' என தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி சி.பி.ஐ. விசாரிக்க கோரிய ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.
பின்னர் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சூசகமான உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் ஒப்புதல் ஆணை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்' என வாதிட்டார்.
ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி வாதிட முற்பட்டபோது, மனுதாரருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன? என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, மனுதாரருக்கான எதிரான புலன்விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மனுதாரர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், நேரடியாக புலன் விசாரணையை தொடங்க முடியும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் ஆணை கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழ்நாடு கவர்னரின் முதன்மைச் செயலாளர் அடுத்த விசாரணை நடைபெறும் வருகிற மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக் வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் "முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் சொன்னார். ஆனால் தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்" எனக் கூறப்பட்டது.
அப்போது, ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர். இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து தமிழக அசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
மொழி பெயர்த்து தந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
- அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.
இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.
ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.
சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.
சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது.
- இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறுகையில், " இந்தியாவில் அரசியல் சாசனம் நிலைப்பதற்கு அதை எழுதியவர்கள் காரணமாக உள்ளனர்.
இந்தியாவில் ஜனநாயகம் எப்படி நிலைக்கும் என கேள்வி எழுப்பியோருக்கு 75 ஆண்டுகால அரசியல் சாசனம் பதில் அளித்துள்ளது.
உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது. இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.
கல்வியை ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமையாக்கியது நமது அரசியல் சாசனம்" என்றார்.
- வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்களை சுருக்கமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 232 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டம் சமத்துவ உரிமையை மீறுவதாகவும், மதத்தின் அடிப்படையில் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமையை வழங்க முயற்சிப்பதாகவும் கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் ரீட் மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்களை சுருக்கமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வாதங்களை தொகுத்து தாக்கல் செய்ய வக்கீல்கள் பல்லவி பிரதாப், கனு அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது.
- பாலியல் பலாத்கார வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.
புதுடெல்லி :
பாலியல் பலாத்கார வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருவிரல் பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்குவது நடைமுறையாக உள்ளது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு தண்டனை விதித்தது. ஆனால், இருவிரல் சோதனை முடிவு அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை ஐகோர்ட்டு மாற்றி, குற்றவாளியை விடுதலை செய்தது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணை முடிவில் குற்றவாளிக்கு செசன்ஸ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதி செய்தும், ஐகோர்ட்டு வழங்கிய விடுதலை தீர்ப்பை ரத்துசெய்தும் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இருவிரல் சோதனை நடத்தக்கூடாது. இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அனைத்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்க வேண்டும்.
இதை மீறி இரு விரல் சோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
- சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
- வருகிற 14-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வக்கீல் விஷால் திவாரி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
வருகிற 14-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
- மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார்.
- இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
புதுடெல்லி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தங்களை விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். இது தொடர்பான மனுக்கள் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி முறையிட்டார். அப்போது நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி, வேறொரு நாளில் பட்டியிலிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு், இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
- சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார்.
- டி.ஒய்.சந்திரசூட் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி பதவியேற்க உள்ளார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி. ரமணா ஓய்வுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.
யு.யு.லலித்தின் பணிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் நாளை (8-ந்தேதி) குருநானக் ஜெயந்தியையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக இன்று பணியாற்றினார்.
இதையொட்டி அவர் தலைமையில் கூடும் சிறப்பு அமர்வின் நடவடிக்கைகள் சுப்ரீம் கோர்ட்டின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிற்பகலில் கூடும் அமர்வில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் இடம் பெற உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார். அவர் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி பதவியேற்க உள்ளார்.
- அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தகவல்.
- சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒருங்கிணைய வேண்டும்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.
எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.
- பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை வருமாறு:-
ஜன-8, 2019: அரசியல் அமைப்பு சட்டத்தின் 103-வது பிரிவில் ஏற்படுத்திய திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜன-9: மேல்சபையில் 103-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜன-12: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக சட்ட அமைச்சகம் அறிவித்தது.
பிப்: இந்த புதிய சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பிப்-6: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.
பிப்-8: 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது.
செப்-8, 2022: மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் பெஞ்ச் அமைக்கப்பட்டது.
செப்-13: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
நவ-7: பொருளாதார ரீதியில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று 3-2 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கப்பட்டது.
- உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு, மன்மோகன்சிங் அரசின் முயற்சியே காரணம்.
- சட்ட மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் தாமதம் செய்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் அல்லாத, பிற உயர் சாதிகளைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது.
கடந்த மன்மோகன்சிங்கின் அரசு மேற்கொண்ட முயற்சியால் 2010 ஆம் ஆண்டு ஜூலையில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அறிக்கையை சின்ஹோ ஆணையம் சமர்ப்பித்தது. 2014ம் ஆண்டிற்குள் இதற்கான சட்ட திருத்த மசோதா தயாராகி விட்ட நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக தாம் இருந்தபோது, 2012ஆம் ஆண்டு, சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சாதி ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை மோடி அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.